ஆகஸ்டு, 1-  தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அருகே இன்று அதிகாலை மூன்று மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கருப்பு நிற ஸ்கோட கார் வேகமா வந்தது.  நிறுத்த முற்பட்ட போது அந்த காரை ஓட்டி வந்தவர் நிறுத்தவில்லை.  உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது கார் மோதியதுதான் பிரச்சினையின் ஆரம்பம்.

உடனே போலிசார் நெருங்கியதும் நான்கு நபர்கள் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டனர். அவர்களில் ஒருவர் அரிவாளால் வெட்ட உதவி ஆய்வாளரின் இடது கையில்  காயம்பட்டது. அந்த நபர் மீண்டும் தலையில் வெட்ட முயற்சித்து உள்ளார். உடனே  உதவி ஆய்வாளர் தலையை குனிந்து கொண்டதால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது.  நல்ல வேளை அவருடைய தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிவிட்டது.

உடனே காவல் ஆய்வாளர் துப்பாக்கியை எடுத்து  ஒருவரையும் உதவி ஆய்வாளர் இன்னொரு நபரையும் சுட்டனர். இதில் இரண்டு பேர் குண்டடிப்பட்டு அங்கேயே சுருண்டுவிட்டனர். மற்ற இரண்டு பேரும்  ஆயுதங்களுடன் தப்பி ஓடிவிட்டார்கள்.

துப்பாக்கிக் சூட்டுக்கு ஆளானவர்களின் ஒருவர்  பெயர் வினோத் {எ) சோட்டா வினோத். வயது 35, ஓட்டேரி காவல் நிலையத்தின் ரவுடிகளின் பட்டியலில் இருப்பவர். இன்னொரு நபர் பெயர் ரமேஷ். வயது 32. இவர்மீது 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உட்பட 50 வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.

இவரும் ஒட்டேரி காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்.

இரண்டு பேரையும் செங்கற்பட்டு அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் இறந்து விட்டதாக போலிசார் தெரிவித்து உள்ளனர். காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன்  குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இருக்கிறார்.

தப்பி ஓடிய இரண்டு பேரும் தேடப்பட்டு வருகின்றனர்.

பழைய கதை.

படப்பை அடுத்த ஆதனுாரைச் சேர்ந்த திமுக நிர்வாகி சக்கரபாணியை ரவுடிகள் மாமூல் கேட்டு சில தினங்களுக்கு முன்பு மிரட்டி உள்ளனர். பணம் தர மறுத்ததால் தாக்க்கபட்ட சக்கரபாணி படுகாயம் அடைந்ததாக மணிமங்கலம் காவல் நிலைய போலீசார வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் ரவுடிகள் ஏழு பேர் ஏற்கனவே சரணடைது விட்டனர். கும்பலின் தலைவனாக செயல்பட்டது  சோட்டா வினோத் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருந்தது. இதையடுத்த சோட்டா வினோத், அவனது கூட்டாளி ரமேஷ் உள்ளிட்டவர்களை போலிசார் தேடிக்கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்து உள்ளது.

அதிகாலையில் ரவுடிகள் இரண்டு பேர் மீது நடந்த துப்பாக்கிச் சுடு கூடுவாஞ்சேரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *