தமிழ்நாட்டின் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கான இரண்டு மாத தடைக்காலம் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் இந்த தடை அமலுக்கு வந்திருக்கிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக் கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்டு உள்ள தடை ஜூன் 14-ந்தேதி வரை தொடரும். இந்த தடை உத்தரவினால் எந்த ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனர்கள் கடலுக்குச் செல்ல முடியாது. மீன்பிடி தடைகாலம் தொடங்கி இருப்பதால் இனி நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டு வர இயலும். இந்த மீன்கள் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்யாது என்பதால் கடல் மீன்களுக்கான தட்டுப்பாடு்ம் விலையும் அதிகரிக்கும். தடை காலம் முடிந்து ஜூன் 14-ந்தேதி விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல ஆரமபித்தப் பிறகே மீன் விலை குறையும் என்ற கருத்து நிலவுகிறது.
2023-04-15