‘ சின்ன கலைவாணர் ‘என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக், 2 ஆம் வகுப்பு படிக்கும்போது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு, கடிதம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன தகவல் –இது .
கே.பாலச்சந்தர் இயக்கிய ’ மனதில் உறுதி வேண்டும் ‘என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விவேக். அதன்பிறகு புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு, இரு வாசல் என அவ ர் இயக்கத்தில் தொடர்ந்து 3 படங்களில் நடித்த விவேக், பின்னர் மற்ற இயக்குநர்கள் படங்களில் நடிக்க தொடங்கினார்.
சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
படங்களின் மூலம் மட்டுமல்லாமல் தனது வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு நல்ல விஷயங்களை சொன்ன, விவேக், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் இணைந்து, மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நடிகர் விவேக், 2 ஆம் வகுப்பு படிக்கும்போது முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.
இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள்.
இது ,குறித்து விவேக் ஹாஸ்யமாக சொன்னது :
‘ 2 ஆம் வகுப்பு படிக்கும் போது, என் மாமன் பொண்ணுக்கு, கடிதம் எழுதினேன்-
ஜவகர்லால் நேரு எல்லோருக்கும் மாமா தானே .. அவரோட பொண்ணு எனக்கு மாமன் பொண்ணு தானே.. அவருக்குத்தான் கடிதம் எழுதினேன்
அந்த கடிதம் எழுதியதை மறந்து, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, ராணுவ வீரர்கள் குதிரையில் வீட்டுக்கு வந்து என்னை தேடினார்கள்.
நான் பயத்தில் ஓடிவிட்டேன்
அதன்பிறகு இந்திராகாந்தி அம்மாவிடம் இருந்து உனக்கு லெட்டர் வந்திருக்கிறது.. அதை கொடுக்கத்தான் வந்துருக்காங்க என எனது அம்மா சொன்னபோது தான், அதை வாங்கினேன்
அதில் அவர் பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி கூறி எழுதியிருந்தார் ‘’என்று விவேக் கூறினார்.
—