ஜூன், 28- மெர்கண்டைல் வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று காலை முடிவுக்கு வந்து உள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய சோதனை பகலும் முடிந்து இரவு வந்த போதும் நீடித்தது. கோவை, சேலம் போன்ற இடங்களில் இருந்து வந்திருந்த வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினார்கள்.
பொதுவாக தனிநபர்கள், பெரும் நிறுவனங்கள் போன்றவற்றில் தான் வருமான வரி சோதனை நடைபெறுவது உண்டு. ஆனால் கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டிய வங்கி ஒன்றில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது அனைவருக்கும் வியப்பாக இருந்நது.
இன்று காலை சோதனையை முடித்துக் கொண்டு புறப்பட்ட அதிகாரிகள் ஐந்துக்கும் மேற்பட்ட பைகளில் ஏராளமான ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
000