200வது பிறந்தநாள் கொண்டாடும் “உதகை”..! சுவர்களில் ஜொலிக்கும் வண்ண ஓவியங்கள்..!!

நீலகிரி மாவட்டத்தில் உதகை வெளியுலகத்திற்கு அறிமுகமானதன் 200 வது ஆண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்புச் சுவர்களில் வரையப்பட்டுவரும் வண்ண வண்ண ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துவருகின்றன.

மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையை 200 ஆண்டுகளுக்கு, கோவை ஆட்சியராக இருந்த ஜான் சலிவன் என்பவர் வெளிஉலகிற்கு அறிமுகம் செய்துவைத்து, உதகை நகரத்தையும் கட்டமைத்தார். இதைத் தொடர்ந்து, தாவரவியல் பூங்கா போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் அங்கு உருவாக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமடைந்தது.

இந்த உதகையை ஆண்டிற்கு 30 லட்சம்பேர் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், உதகை நகர் உருவாக்கப்பட்டு, தற்போது 200 ஆண்டுகள் நிறைவடைதுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் தமிழக அரசு10 கோடி ஒதுக்கி அரசு விழாவாக நடத்திவருகிறது. இதற்காக மே மாதம் நடைபெறும் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

200வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளையும், வனவிலங்குகளையும் பாரம்பரிய சின்னங்களையும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் உதகை நகரில் உள்ள தடுப்புச் சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுவருகிறது.

குறிப்பாக, சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே யானை, புலி, மான் வரையாடு, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகிறது.

தற்போது கோடை சீசனையொட்டி, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வனவிலங்குகளை வனப்பகுதிகளில் பார்த்து ரசிப்பதோடு, தடுப்புச் சுவர்களில் ஓவியமாகவும் பார்த்து மகிழ்கின்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *