டிசம்பர்-31,
—
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். முதலிருவர் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள்.மூன்றாமவர், அதனை நெருங்கி கொண்டிருக்கிறார்.
தயாரிப்பாளர்கள் எப்படி இருக்கிறார்கள்?
ஏற்கனவே பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ஜெமினி, ஏவிஎம்,,விஜயா –வாஹினி, சத்யா மூவீஸ், போன்ற கம்பெனிகள் ,கடையை மூடி விட்டார்கள்.
வேறு பாதை தெரியாதததால், சினிமா தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள சொற்ப ஆட்களும், சீக்கிரமே மூட்டை , முடிச்சுகளை கட்ட ஆயத்தம் ஆகி வருகிறார்கள்.
கோடம்பாக்கத்தின் இன்றைய நிலை அப்படி ஒரு இக்கட்டில் சிக்கி தவிக்கிறது.
இந்த ஆண்டு தமிழில் 241 சினிமாக்கள் ரிலீஸ் ஆனது.இவற்றில் 223 படங்கள் தோல்வியை தழுவி உள்ளன.
இதனால் ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்,தியேட்டர் உரிமையாளர்களுக்கு 18 படங்கள் மட்டுமே லாபத்தை கொடுத்துள்ளன. அவை,அனைத்துமே அநேகமாக பெரிய பட்ஜெட்டில், பெரிய நடிகர்களை வைத்து உருவானவை.
விஜய் நடித்த ‘தி கோட்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’,தனுஷ் டைரக்டு செய்து நடித்த ‘ராயன்’ ஆகிய மூன்று படங்களும் வசூலை வாரிக்குவித்த ‘டாப் 3 படங்கள்.
ரஜினியின் ‘வேட்டையன்’ சுந்தர் .சி.யின் ‘அரண்மனை -4’, விஜய சேதுபதியின் ‘மகாராஜா, அரவிந்த்சாமி –கார்த்தி இணைந்த ‘மெய்யழகன்’ ஆகிய படங்களும் வெற்றிக்கண்டன.
நடுத்தர பட்ஜெட் படங்களான டிமாண்டி காலனி, வாழை,கருடன், ரோமியோ, ஸ்டார், பிளாக், பிடி சார், அந்தகன் ஆகிய சினிமாக்களும் வெற்றி முகட்டை தொட்டுள்ளன.
சின்ன பட்ஜெட் படங்களில்,லப்பர் பந்து,லவ்வர், பேச்சி ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் ‘பாக்ஸ் ஆபீஸ்’ மட்டத்திலும் உயர்த்தி கொண்டன.
கேரள சினிமாவில்700 கோடி ரூபாய் இந்த ஆண்டு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மலையாள தயாரிப்பாளர்கள் வேதனை கண்ணீர் வடித்துள்ள நிலையில், கோடம்பாக்கம் லட்சணமும் இதுதான் என புலம்புகிறார், சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர் கே.ராஜன்.
*