ஜுலை,23-
தமிழ் நாட்டில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
கும்பகோணம் அடுத்து உள்ள திருபுவனத்தில் கடந்த 2019 ஆண்டு ராமலிங்கம் என்ற சமையல் ஒப்பந்ததாரர் வெட்டிக் கொல்லப்பட்டார். மத மாற்றத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்டதால் வாய்த் தகறாறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கிருந்து சென்றவர்கள் பிறகு ராமலிங்கத்தை வெட்டிக் கொன்று விட்டனர்.
இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் பாபுலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்.
ராமலிங்கம் கொலையில் தீவிரவாத தன்மை இருப்பதாக கருதி வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்த வருகிறது. மேலும் 5 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
000