June 09, 23
கடந்த 1951 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த எரிக் மோர்லே என்பவர் மிஸ் வேர்ல்டு போட்டியை தொடங்கினார். இதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உலக அழகி போட்டி நடைபெற்ற வருகிறது . கடந்த 1996 ஆம் ஆண்டில் மிஸ் வேர்ல்டு போட்டி இந்தியாவில் நடைபெற்றது.
இந்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்டு 2023 அழகி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் நவம்பர், டிசம்பரில் போட்டி நடத்தப்படும் என்றும் , இது 71ஆவது மிஸ் வேர்ல்டு போட்டி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 130 நாடுகளை சேர்ந்த பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் .அழகு ,பன்முகத்தன்மை ,பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இப் போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை ரீட்டா, ஐஸ்வர்யாராய் ,டயானா, யுக்தா முகி , பிரியங்கா சோப்ரா, மனுஷி சில்லார் உள்ளிட்ட 6 இந்திய பெண்கள் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ளனர்.