ஜூன் -27
இந்தியாவில் இருந்து இன்று தொடங்கும் ஐசிசி உலகக்கோப்பை ம் 27 நாடுகளுக்கு பயணம் செல்கிறது. ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர், நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 – ஆம் தேதி வரை இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன,
இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும், இந்த தொடரில் 5 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், இந்திய கிரிக்கெட் வாரியமும் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலகக்கோப்பையை பிரத்யேக பலூனில் வைத்து, அது விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அது பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் விளிம்பில் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது.
இந்நிலையில், ஐசிசி உலகக் கோப்பை, 27 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இன்று தொடங்கும் பயணம் குவைத், பெஹ்ரைன், மலேசியா, அமெரிக்கா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று நிறைவாக செப்டம்பர் 4-ஆம் தேதி இந்தியா வந்தடைகிறது.
ஒவ்வொரு இடங்களிலும் பிரம்மாண்ட வரவேற்புடன் கூடிய பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐசிசி கோப்பை சுற்றுப்பயண நிகழ்ச்சிகளின் போது மொத்தமாக 10 லட்சம் ரசிகர்களுக்கு வெள்ளியால் ஆன மாதிரி கோப்பை வழங்கி உற்சாகப்படுத்தவும் ஐசிசி திட்டமிட்டுள்ளது.