இந்தியாவில் இருந்து பூட்டான் நாட்டுக்கு ரெயில் பாதை அமைக்க முடிசெய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பூட்டான் நாட்டு அரசர் ஜிக்மெம் வாங்சுக் 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இதனை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டிற்கும் இடையில் ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.