அஜ்மீர்-டெல்லி இடையே நாட்டின் 15வது வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்து பேசிய, பிரதமர் மோடி, இந்த வந்தே பாரத் ரயிலின் மூலம் சுற்றுலா மேம்படும் என்றும், இரு நகரங்களின் இணைப்பு எளிதாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ரயில் ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில் மூலம் அஜ்மீர்-டெல்லி இடையேயான பயணம் ஒரு மணி நேரம் குறைகிறது.
சதாப்தி ரயிலில் அஜ்மீர்-டெல்லி இடையேயான ரயில் பயணம் ஆறு மணி நேரம் 15 நிமிடங்களாக இருக்கும் சூழலில் வந்தே பாரத் ரயிலில் 5 மணி நேரம் 15 நிமிடங்களில் பயணிக்க முடியும்.
வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,ரயில்வே ஊழியர்கள் வேலைக்காக, முந்தைய காலத்தில் நில அபகரிப்புகளும் நடந்ததாக லாலு பிரசாத் யாதவை மறைமுகமாகச் சாடியும் பேசினார்.