ஆகஸ்டு,06-
மலையாள திரை உலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ், டைரக்ஷனிலும் ஆர்வம் காட்டி வருகிறார்..
இவரது இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்த மலையாளப் படம், ‘புரோ டாடி’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்தப்படத்தில் பிருத்விராஜுக்கு அம்மாவாக மீனா நடித்திருந்தார். இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.இதில் மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார். அவரது மகனாக பிருத்விராஜ் வேடத்தில் 39 வயதான ஷர்வானந்த் நடிக்கவுள்ளார். மீனா கேரக்டரில் த்ரிஷா நடிக்கிறார். அதாவது ஷர்வானந்துக்கு அம்மாவாக த்ரிஷா நடிக்கவுள்ளார்‘பங்கர்ராஜூ’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணா இயக்குகிறார்.
ரஜினி,கமல், விஜய், அஜித் என பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த , த்ரிஷா அம்மாவாக நடிப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
39 வயது ஷர்வானந்தின் அம்மாவாக 40 வயது த்ரிஷாவை எப்படி நடிக்க வைக்கலாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.
000