ஏப்ரல் 17
40 சதவீத கமிஷன் பா.ஜ.க. அரசாங்கத்தின் பிடியில் இருந்து கர்நாடகா விடுதலை பெறுவதை உறுதி செய்வோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேஸ்புக்கில் ஒரு பதிவில், பசவண்ணா ஜியின் அன்பு, பணிவு மற்றும் இரக்கம் ஆகியவற்றின் போதனைகள் ஒவ்வொரு கன்னடர்களின் டி.என்.ஏ.விலும் ஆழமாகப் பதிந்துள்ளன. மேலும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது இந்தியாவின் சிறந்த எதிர்காலத்திற்காக நடந்த நம் அனைவருக்கும் இது ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. தனது சொந்த லாபத்திற்காக மாநில மக்களின் பரந்த திறனை சுரண்டுகிறது. 40 சதவீத கமிஷன் பா.ஜ.க. அரசாங்கத்தின் பிடியில் இருந்து கர்நாடகா விடுதலை பெறுவதை உறுதி செய்வோம். இன்று திரும்பி வருவதற்கு காத்திருக்க முடியாது, கேட்கவும், கற்றுக்கொள்ளவும், மாநில மக்களுடன் இணைந்து ஆட்சி செய்வதற்கான புதிய பார்வையை உருவாக்கவும் காங்கிரஸ் வந்து முன்னேற்றம் தரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தேடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. காங்கிரஸ் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.