மியான்மர் ஏர்வேஸ் இன்டர்நேஷனல், சென்னை விமான நிலையம் மியான்மரில் உள்ள யாங்கூன் இடையே புதிய விமான சேவையை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலைய இயக்குநர் எஸ்.எஸ். ராஜூ, மியான்மர் கௌளரவ தூதர் பேராசிரியர் ஜே. ரங்கநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி புதிய விமான சேவையைத் தொடங்கி வைத்தனர். 2023 ஆம் ஆண்டு, அண்டை நாடுகளான இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான 75 ஆண்டுகால நட்புறவைக் குறிக்கிறது.
சனிக்கிழமைகளில் இயக்கப்படும் மியான்மர் ஏர்வேஸ் விமானம் யாங்கூனில் இருந்து 0800மணிக்கு புறப்பட்டு 1015 மணிக்கு சென்னை வந்து 1115 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 1515மணிக்கு (உள்ளூர் நேரப்படி) யாங்கூன் சென்றடையும். 6 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 92 பொருளாதார வகுப்பு இருக்கைகள் என மொத்தம் 98 இருக்கைகளை இந்த விமானம் கொண்டுள்ளது.
சென்னைக்கு வந்த தொடக்க விமானத்திற்கு வழக்கமான நீர் பீரங்கி வணக்கம் செலுத்தப்பட்டது. சென்னைக்கு முதலில் வந்த விமானத்தில் 48 பயணிகள் இருந்தனர், 70 பயணிகள் யாங்கூனுக்கு புறப்பட்டனர். புதிய விமான இணைப்பு இரு நாடுகளின் வர்த்தகம், சுற்றுலாத் துறைகளில் பரஸ்பரம் பயனடைவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய சேவை தொடங்கப்பட்டதன் மூலம், சென்னையிலிருந்து செல்லும் பயணிகள், வளமான கலாச்சாரப் பாரம்பரியம், பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகள் மற்றும் சுவையான உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற யாங்கூனுக்கு இப்போது எளிதாகவும் வசதியாகவும் பயணிக்கலாம்.