மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’
திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில்
200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
‘லூசிபர்’ மலையாள படத்தின் இரண்டாம் பாகமான
‘எம்புரான்’ 27 ஆம் தேதி உலகம் முழுவதும்
வெளியானது.
மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார்
உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை நடிகர்
பிரிதிவிராஜ் இயக்கியுள்ளார்.
குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இந்த படத்தில்
இடம் பெற்றதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.இதனால் சர்ச்சைக்கு உரிய 3 நிமிட காட்சிகள்நீக்கப்பட்டுள்ளன.இதற்கும் தணிக்கை சான்றிதழ்
பெறப்பட்டு, புதிய பதிப்பு ,நேற்று தியேட்டர்களில்
வெளியிடப்பட்டது.ஆர்.எஸ்.எஸ். கோரிக்கையை ஏற்று வில்லன் கேரக்டர்பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த
எம்புரான் கடந்த 5 நாட்களில் 200 கோடி ரூபாய்
வசூலை தாண்டி விட்டதாக பட தயாரிப்பு நிறுவனம்
அறிவித்துள்ளது.
மலையாள திரைப்படங்களி்ல் ரூ 200 கோடி தியேட்டர் வசூல் என்பது மிகப்பெரிய சாதனையாகும்.
–