“500 கடைகளை மூடினால் போதாது.. போதை மீட்பு மையங்கள் திறக்க வேண்டும்” என கமல்ஹாசன் கோரிக்கை.
டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகைளை மூடுவதாக வெளியிட்ட அறிவிப்பு அமலுக்கு வந்தது. நேற்று ( புதன்) இரவு பத்து மணிக்கு மூடப்பட்ட அந்த 500 கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. கடைகளில் உள்ள மதுப்பாட்டிகள் மற்றைய பொருடகள் ஒரு வாரத்தற்குள் அப்புறப்படுத்தப்படு்ம் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன்படி சென்னை மண்டலத்தில் மட்டும் 60 க்கும் அதிமான கடைகள் மூடப்படுகின்றன.
500 மதுக்கடைகள் மூடபப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளன. மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் நடிகர் கமலஹாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் போதை மறுவாழ்வு மையங்களைத் திறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.
அவருடைய அறிக்கை வருமாறு…
தாலுகா தோறும் போதை மீட்பு மற்றும் மது நோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும்.
மதுப்பழக்கம் பல ஆயிரம் பேரின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. தமிழகத்தின் சமூகப் பொருளாதாரத்தில் மதுவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அளவீடற்றவை. மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மதுக்கடைகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை, நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதைப் பாராட்டுகிறோம்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவனைகள், கோயில்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள் குறித்தும் ஆய்வு செய்து, அவற்றையும் அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவ போதை மீட்பு மற்றும் மது நோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் தமிழகத்தின் அனைத்து தாலுகாவிலும் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும்.
மதுபோதைக்கு அடிமையாகாத எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
இவ்வாற கமல் ஹாசன் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.