ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் சக்கைபோடு போட்டது. அதன் இரண்டாம் பாகம் ’இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகி உள்ளது.
இரண்டாம் பாகத்தில் ஷங்கரும், கமலும் மட்டும் தான் பழைய ஆட்கள். தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், நடிகர்கள் என இதில் முற்றிலும் வேறு வேறு ஆட்கள் பங்கேற்றுள்ளனர்.
லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். காஜல் அகர்வால், சமுத்திரக்கனி,விவேக்,மனோபாலா, பாபி சிம்கா,, சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியன் 2 படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் குறித்த அறிவிப்பை ஷங்கர் வெளியிட்டுள்ளார்.
படத்தில், லோலா விஎப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது-. இது கமலின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது-. இந்த விஎப்எக்ஸ், ஹாலிவுட் படமான ஐரிஸ்மேன் மற்றும் அவஞ்சர்ஸ் எண்ட் கேம் படங்களுக்கு பயன்படுத்தபட்டதாகும்.
இப்போதே படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. ஆடியோ ரைட்ஸ் 23 கோடி ரூபாய்க்கு விலை போனது. ஓடிடி உரிமை 220 கோடி ரூபாய்க்கு விலை போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் குறித்து இன்னொரு முக்கிய செய்தியும் உண்டு. ஷுட் செய்த பகுதிகளை ஷங்கர் பார்த்த போது பிரமித்துப்போனார்.படம் 6 மணி நேரம் ஓடியது. தமிழ் படம் அதிக பட்சமாக 3 மணி நேரம் தான் ஓடும். இதனால் எஞ்சிய 3 மணி நேரக்காட்சிகளை பயன்படுத்தி ’இந்தியன் -3’யை உருவாக்கும் யோசனையில் மூழ்கியுள்ளார், பிரமாண்ட இயக்குநர்.
கமல்ஹாசன் 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் மூன்றாம் பாகம் ரெடியாகி விடுமாம்.
ஷங்கர் ரெடி.கமல் ரெடியா?
000