June 19, 23
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மழைபொழிவு அதிகமாக இருந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கத்தில் மட்டும் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஒரு நாள மழைக்கே தலைநகரம் ஸ்தம்பித்தது தான் விடியல் ஆட்சியா என பாஜக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஒரு நாள் மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகள், நீரில் மூழ்கிய வாகனங்கள், அஸ்தமித்த தலைநகரம். இரண்டு ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இது தானா? விடியல் ஆட்சி என பெருமை பேசும் முதல்வர் பதில் சொல்வாரா? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.