சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஜுன் மாதத்தில் அதிக மழை பெய்துள்ள. இதற்கு முன்பு 1996 ஆண்டு தான் இந்த பருவத்தில் அதிக மழை பெய்திருந்தது.
வழக்கமாக வடகிழக்குப் பருவ மழைக் காலமான அக்டோபர்,நவம்பர் மாதங்களில் தான் கன மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின் தொடக்கதிலேயே நல்ல மழை பெய்து உள்ளது.
சென்னையில் செய்திளார்களிடம் பேசிய வானிலை மைய அதிகாரி பாலச் சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இது கடந்த 73 வருடங்களில் ஜூன் மாதத்தில் மீனம்பாக்கத்தில் இரண்டாவது அதிகபட்ச மழை பதிவாகும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், ரணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.
இரவு முதல் பெய்த கன மழை காரணமாக மயிலாப்பூரில் சிவசாமி சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர் விவேகானந்தா கல்லூரி வளாகத்திலும் மழை நீர் சூழ்ந்திருந்தது.
ஆற்காடு சாலையில் வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மரத்தின் பெரிய கிளை உடைந்து சாலையில் விழுந்ததில் காலையில் பணிக்கு செல்லக்ககூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
அண்ணா மேம்பாலம் கீழே உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்ல நேரிட்டது.
இதையடுத்து சாலையின் ஓரங்களில் இருக்கக்கூடிய மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்றி மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
செம்பியம், கொளத்தூர், தலைமைச் செயலகம் அருகே, மைலாப்பூர், கிண்டி, தியாகராயர் நகர் உள்ளிட்ட 8 இடங்களில் மழையின் காரணமாக மரங்கள் விழுந்தது. இவற்றை உடனுக்கு உடன் அப்புறப்படுத்தி விட்டதாக தீயணைப்புதுத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
நள்ளிரவு பெய்த கன மழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய 10 விமானங்கள் பெங்களூர் விமான நிலையத்தில் மாற்றி இயக்கப்பட்டது
பின்னர் மழை குறையத் தொடங்கியதால் சென்னை விமான நிலையத்திலேயே விமானங்கள் தரையிறக்கப்பட்டு வருகின்றன.
சென்ட்ரல் – பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்திற்கும் கீழே தண்ணீர் தேங்கியதால் சில ரயில்களை கடற்கரை அல்லது பெரம்பூர் நிலையங்களில் இருந்து இயக்க நேரிட்டது
சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான பூண்டி, சோழபுரம், செங்குன்றம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு மொத்தம் 6755.5 கன அடியாக இருந்தது. கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக அனைத்து ஏரிகளுலும் 6819 கன அடியாக நீர் இருப்பு உயர்ந்துள்ளது.
000