ஆகஸ்டு,2-

தாதா 87′ மற்றும் ‘பவுடர்’ ஆகிய படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு  ’மைக்’ மோகன் மீண்டும் நடிக்கிறார்.

குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். , வனிதா விஜயகுமாருக்கு இதில் அரசியல்வாதி கேரக்டர்.

படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. ‘ஹரா’ திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் நடிகர் சாருஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சாருஹாசன் ஏற்கனவே ஜெய்ஹிந்த் படத்தில் தீவிரவாதிகளின் தலைவராக நடித்துள்ளார்.

93 வயதில் வில்லன் வேடமா, சாருஹாசனை வாழ்த்தி மகிழ்வோம்.

000

 

.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *