10 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்!

ரஜினிகாந்த்  நடித்த ‘அண்ணாத்த’ படத்தையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் புதிய படம். கங்குவா’.

சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று  வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய ஆறு மொழிகளில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இதில் சூர்யாவின் தோற்றம் மிகவும் வித்தியாசமாக , கவனம் ஈர்க்க்கும் வகையில் உள்ளது.

‘கங்குவா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.வாளேந்தி குதிரையில் சூர்யா வருவது போன்ற இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *