ஜுலை,24-
கோயம்புத்தூரில் வீட்டு முன் நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடியவன், கைகளை அசைத்து டாட்டா காட்டிவிட்டு சிட்டா பறந்து சென்ற காட்சி வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் பசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அங்காளம்மன் கோயில் தெருவில் சுரேஷ் என்பவர் வீட்டு முன் டியூக் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரணடு பேர் அந்த தெருவுக்கு வந்து நோட்டம் பார்த்தனர்.அவர்களில் ஒருவன் இறங்கிச் சென்று ஸ்குரு டிரைவர் போன்றவற்றால் டியூக் மோட்டர் சைக்கிளை திறந்து ஸ்டார்ட் செய்தான். பிறகு அவன் கையை அசைத்து டாட்டா காட்டிவிட்டு அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுவிட்டான்.
சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலிசார் சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி திருடனை தேடிவருகின்றனர். மோட்டார் சைக்கிளை திருடன் லாவகமாக திருடிச் செல்லும் காட்சி வளைதளங்களில் பரவி வருகிறது.
000