ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம்-இந்தியன்.

இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘இந்தியன் 2’கொரோனா, நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து ஒருபடியாக நிறைவடைந்து விட்டது.

கமல்ஹாசன் தவிர, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம் கமல்ஹாசனின் வயதை குறைத்துக்காட்டும் பணிகளில் இயக்குநர் ஷங்கர்,  ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் மாகாணத்தில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் நடிகர் கமல்ஹாசனும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தற்செயலாக சந்தித்து கொனடனர். புகழ்பெற்ற இந்த மியூசியத்தில் கமலும், ரஹ்மானும் இணைந்து ‘காட்ஃபாதர்’ படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வென்ற புகைப்படங்கள் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த போட்டோக்களை கமலும் ரஹ்மானும் பார்த்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. , நடிகர் கமல்ஹாசன் ஆஸ்கர் விருது வென்ற ஒப்பனை கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோருடன் எடுத்த புகைப்படங்களும் வைரலானது..

இந்தியன் 2 – க்கு ரஹ்மான் இசை அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *