சினிமாவை குறை சொல்வது எளிது..வைரமுத்து ஆதங்கம்.

ஜுலை, 30-

வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ஃபைண்டர்’.

இந்தப்படத்தில் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி பிரானா ஆகியோரும்  நடித்துள்ளனர். சூர்ய பிரசாத் இசையமைத்துள்ள  இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக  கவிஞர் வைரமுத்து  பங்கேற்றார்.

அவரது உரை இது:

சினிமாவின் முதல் ரசிகனும் நான்தான், கடைசி உழைப்பாளியும் நான்தான். சினிமா என்பது  பொழுதுபோக்கு மட்டும் இல்லை .அது பல்கலைகழகம், நாம் அங்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இயக்குனரும் இசையமைப்பாளரும் என் வீட்டிற்கு வந்தனர். அவர்களை உற்று கவனித்தேன்.

அவர்கள் கதை சொல்ல மட்டும் வந்தவர்கள் அல்ல .சரித்திரம் படைக்க வந்தவர்கள். நான் புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களை பார்ப்பதில்லை .அவர்களது உழைப்பைத்தான் பார்ப்பேன், இவர்களது உழைப்பு அருமையாக இருந்தது. தயாரிப்பாளர் சுப்ரமணியனுக்கு எனது வாழ்த்துகள் இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். இந்தப் படத்தில் பாடல்கள் கதையை சொல்லவில்லை படத்தில் வரும் ஒரு நிகழ்வை சொல்லுமாறு அமைந்துள்ளது.

சினிமாவில் குறை சொல்வது எளிது. ஆனால் நிறை காண்பது அரிது. அதனால் யாரும் எழுதட்டும். யாரும் பாடட்டும் .அதில் யாரும் நடிக்கட்டும் .ஆனால் தமிழை நன்கு அறிந்து விட்டு அதை செய்யட்டும். இதைத்தான் நான் வேண்டுகோளாக வைக்கிறேன்.

இந்த படத்திற்கு தமிழில் தலைப்பை வைக்க வேண்டுமென்று கேட்டேன் ஆனால் படக்குழுவினர் வியாபாரத்தில் அது பிரச்சினை ஏற்படுத்துகிறது என்றனர். தமிழுக்கு அது தவறு என்றாலும் தயாரிப்பாளர் தமிழன் என்பதால் இதை ஒப்புக் கொண்டேன். சார்லி,. நாற்பது வருடம் இந்த சினிமாவில் இருந்து வருகிறார். அவரது கலை மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.’’

வைரமுத்துவின் இந்த பேச்சு விழாவின் முத்தாயப்பாக இருந்தது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *