இயக்குநர் ஷங்கரின் 30 ஆண்டுகள்.. வாயப்பை இழந்த சரத் குமார் !

ஜுலை,31-

பிரமாண்ட படங்களின் பிதாமகனாக கருதப்படும் ஷங்கர் , சினிமா இயக்குநராகி 30 ஆண்டுகள் ஆகின்றன.

எஸ்.ஏ.சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய ஷங்கரை சினிமா டைரக்டராக அறிமுகம் செய்து வைத்தவர் கே.டி.குஞ்சுமோன்.

அவர், தயாரித்து,  ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜென்டில்மேன்’. 1993-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம் தேதி வெளியானது. ஆம். ஷங்கர், தமிழில் இயக்குநராக அடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகிறது.175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடிய இந்த படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஆக்கபூர்வமான விமர்சனங்களோடு, தயாரிப்பாளருக்கு பெரும் பணத்தையும் இந்த படம் கொட்டிக்கொடுத்தது. இந்த படத்தில் இணைந்த ஷங்கர்- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, இதன் பின், தொடர்ச்சியாக காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என ‘‘பான் இந்தியா ‘’ படங்களை அப்போதே அளித்தனர்.

அர்ஜுன், சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம்.

இந்தப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,. இதனைக் கொண்டாடும் வகையில் ட்விட்டரில் #30YearsofGentleman என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களை ஷங்கர் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்த சந்தோஷத்தை, ஷங்கர் தனது உதவியாளர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன,

பழைய செய்தி ஒன்றை இங்கே நினைவு கூற வேண்டும். இந்தப்படத்தில் முதலில் கதாநாயகனக நடிக்க சரத்குமாரைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தனர்.அழைப்பிதழும் ரெடி.அப்போது பவித்ரன் இயக்கிய ’ஐ லவ் இந்தியா’ படத்துக்கு சரத்குமார் ,மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருந்ததால்,அவரால் ’ஜென்டில்மேன் ‘ஆக முடியவில்லை.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *