தலைப்புச் செய்திகள் (01-08 -2023)

*மணிப்பூர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பற்றத் தவறிவிட்டது காவல்துறை..மாநில டிஜிபி வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு.

*கலவரத்தின் போது ஆடைகளை களைந்து அழைத்துச் செல்லப்பட்ட பெண்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது.. மணிப்பூர் காவல் துறை கவனமாக செயல்படுமாறு தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவுறுத்தல்.

*நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது 8- ஆம் தேதி விவாதம் தொடங்க வாய்ப்பு.. எதிர்க்கட்சிகள் தொடுக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதலளிக்க உள்ளதாக தகவல்.

*புனேவில் லோகமானிய திலக் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மேடையில் சரத்பவார் பங்கேற்பு.. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேசிய வாத காங்கிரஸ் தலைவர் புறக்கணித்ததால் சர்ச்சை.

*கொடநாடு கொலை வழக்கை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ.பி.எஸ். அணி முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்.. தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் டி.டி.வி.தினகரனும் பங்கேற்பு.

*சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் வாகன சோதனையின் போது தப்பி ஓட முயன்ற ரவுடிகள் இருவர் போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இறப்பு.. மேலும் இரண்டு பேருக்கு வலை வீச்சு.

*அதிமுகவின் கட்சிக் கொடி மற்றும் சின்னத்தை பயன்படு்த்தி ஓ.பி.எஸ். அணி ஆர்ப்பாட்டம் நடத்துவது சட்ட விரோதம்.. நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை போலிசில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளார் புகார்.

*கலவரத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு ரூ பத்துக்கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புகிறது தமிழ்நாடு அரசு.. பொருட்களை அனுப்ப அனுமதி கேட்டு மணிப்பூர் மாநில முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.

*அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் இரு தரப்பு வாதங்களை நாளை முடித்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் ஆணை.. உடல் நிலை தேறி வருவதால் சிறையில் செந்தில் பாலாஜியிடம் தினமும் சிறிது நேரம் விசாரணை நடத்தலாம் என்று அவருடைய வழக்கறிஞர் கருத்து.

*என்.எல்.சி. நிறுவனம் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் வயல்களில் இரவிலும் கால்வாய் தோண்டும் பணியை தொடருகிறது.. எதிர்ப்பு தெரிவிக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுப்பு.

*கனடா நாட்டில் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பயணம்.. விவசாயத் தொழில் நுட்படங்கள் குறித்து நேரில் ஆய்வு.

*சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரிக்கை..மயிலாடு துறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் போராட்டம்.

*ஓசூர்- பெங்களூர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கு நடவடிக்கை.. இரண்டு மாநிலங்கள் இடையே அமையும் பாதைக்கான செயல்திட்டங்களை தயாரிக்க டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ ரயில நிறுவனம்.

*கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து அவதூறு பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..தமிழ் நாடு டி.ஜி.பி. எச்சரிக்கை.

*இந்தியாவில் கடந்த ஜுலை மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய்.. கடந்த ஜுலையுடன் ஒப்பிடும் போது 11 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக நிதி அமைச்சகம் தகவல்.

*மும்பை அடுத்த தானேவில் பாலம் கட்டும் பணியின் போது கிரேன் சரிந்து விழுந்து விபத்து.. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 17 பேர் உயிரிழப்பு.

*அரியானா மாநிலத்தில் நூக் என்ற மாவடத்தில் இரு தரப்பினர் இடையே மூண்ட மோதல் கவரமாக மாறியதில் நான்கு பேர் இறப்பு.. வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க போலிஸ் நடவடிக்கை.

*பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்க பாட்னா உயர்நீதிமன்றம் மறுப்பு… அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க இயலாது என்று நீதிபதிகள் கருத்து.

*ராகுல் காந்தி டெல்லியில் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் உடன் கலந்து உரையாடல்.. காய்கறி விலை மற்றும் சிறு வியாபாரிகள் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார்.

*வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதன் எதிரொலி.. தூத்துக்குடி துறை முகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *