இலவசத்தால் கர்நாடக மாநிலத்தில் விலை வாசி கிடுகிடு உயர்வு.

ஆகஸ்டு,02-

இலவசமே வேணாம்’ என்று கர்நாடக மக்கள் வீதிக்கு வந்து போராடினால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

காரணம்?

இலவசங்களை வாரி வாரி இறைப்பதால், சகட்டு மேனிக்கு வரிகள் விதித்து, விலைவாசியை ராக்கெட் வேகத்துக்கு உயர வைத்துள்ளது, கர்நாடக அரசு.

கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தபோது , ஏகப்பட்ட இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவித்தது ,காங்கிரஸ். ஜெயித்ததும் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறது.

பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய், பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய், டிப்ளமோ படித்தவர்களுக்கு 1500 ரூபாய் மாதம் தோறும் அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுக்க பெண்கள் அரசு பஸ்களில் ஓசியில் சுற்றலாம். மாதம் தோறும் 10 கிலோ அரிசி இலவசம். 200 யூனிட் வரை மின்சாரமும் இலவசம்.

இதற்காக ஆண்டுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இவ்வளவு பணத்தை திரட்ட நோட்டா அடிக்க முடியும்?

பாலில் ஆரம்பித்து மது ரகங்கள் வரை அனைத்து இனங்கள் மீதும் வரி மேல் வரி விதித்து ,மக்களை கசக்கிப்பிழிய ஆரம்பித்து விட்டது கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம். ஓட்டல்களில் டீ,காபி தொடங்கி அனைத்து உணவு பொருட்கள் விலையும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விலை கிலோ 100 ரூபாயை தாண்டி விட்டது. தக்காளி விலையை கேட்கவே வேண்டாம். 200 ரூபாய். லிட்டருக்கு 3 ரூபாய் ஏறி விட்டது பாலின் விலை.  மது ரகங்கள் விலை பாட்டிலுக்கு 25 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

’’சரக்கு’’இல்லாமலேயே கிறுகிறுக்க வைக்கிறது ,கர்நாடக விலைவாசி நிலவரம்.

இலவசம் என்ற பெயரில் விளம்பரம் தேடும் அரசியல் கட்சிகளுக்கு கர்நாடகா ஒரு பாடம்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *