அம்மா உணவகங்களை மூட வேண்டாம்.. சாமனிய மக்கள் கோரிக்கை !

ஆகஸ்டு,03-

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, நிறைவேற்றிய திட்டங்களில் அடித்தள மக்கள் பலன் அடைந்த மகத்தான திட்டம்- ’அம்மா உணவகம்’.

ஏழை-எளிய மக்கள் பசியால் துவளக்கூடாது எனும் நோக்கில் கடந்த 2013-ம் ஆண்டு  இதனை கொண்டு வந்தார்.  காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக்குறைந்த விலையில் இங்கு உணவு வழங்கப்பட்டது.

சோதனை முயற்சியாக  சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அன்றாடம் காய்ச்சிகள் மட்டுமில்லாமல், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினரும் அம்மா உணவகத்தை தேடி வந்தனர்.

சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டது.  சென்னையில் மட்டும் வார்டுக்கு இரண்டு வீதம்  மொத்தம் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அம்மா உணவகத்தில்  லாப-நஷ்ட கணக்குகள் பார்க்கப்பட்டன.

நஷ்டத்தில் ‘ஓடும்’ அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன.  சென்னையில் இதுவரை 14 அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. சென்னையில்  இப்போது செயல்பாட்டில் உள்ள அம்மா  உணவகங்களின்  எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

தியாகராயர் நகர்  தியாகராயர் ரோட்டில் ( வார்டு 117) உள்ள அம்மா உணவகத்தை இடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 

அந்த  உணவகத்தால் மூன்று வேளையும் வயிறு நிரப்பி வந்த சாமான்யர்கள் அதிர்ந்துள்ளனர். அந்த உணவகம் இடிக்கப்பட்டால், அதன்  அருகில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் அம்மா உணவகம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது ஒரு சாமனியரின் கோரிக்கை.

00

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *