ஆகஸ்டு, 06-
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்டதாக புகார் கூறப்பட்ட குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விட்டது.
ஒன்றரை வயதான தஸ்தகிர் என்ற இந்த குழந்தை கடந்த மாதம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அப்போது குழந்தையின் கை அழுக ஆரம்பித்ததால் அந்த கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சிம், தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தையின் கையை அகற்ற நேரிட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதனால் அரசு சார்பில் விசாரணை நடத்திய குழு குழந்தைக்கு தவறான சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என்று அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து குழந்தைக்கு அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ஒன்றரை வயது குழந்தை தஸ்தகீர் உயிரிழந்தது.
குழந்தையின் தாய் அஜிசா “மருத்துவர்கள் செய்த தவறுக்கு என் பிள்ளை பலியாகி விட்டான். மனசாட்சி இல்லாதவர்கள் எதை எதையோ பேசுகிறார்கள்.குழந்தையின் உடலை உடற் கூறாய்வு செய்யாமல் எங்களிடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
000