ஆகஸ்டு,07-
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது.
கட்டுமானத்துக்கு தேவையான தகரம் முதல் தங்கம் வரை பக்தர்கள் நன்கொடையாக வழங்கி வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராமர் கோயில் திறப்பு விழா நடை பெறுகிறது.
ராமர் கோயிலுக்கு சத்ய பிரகாஷ் சர்மா என்பவர், வித்தியாசமான நன்கொடையை வழங்க முடிவு செய்துள்ளாரஇவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை. சேர்ந்தவர் ,பூட்டு தயாரிக்கும் கலைஞர். தனது வீட்டிலேயே சின்ன அளவில் தொழிற்சாலை அமைத்து பூட்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது குடும்பம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.எனவே,சின்ன வயதிலேயே பூட்டு தயாரிக்கும் தொழிலுக்கு வந்து விட்டார்,சர்மா.
அயோத்தி ராமர் கோயிலுக்கு அன்பளிப்பாக அளிக்க சர்மா, பிரமாண்ட பூட்டு ஒன்றை, தனது கையாலேயே தயாரித்துள்ளார். இந்த பூட்டின் உயரம் 10 அடி. அகலம் -4.5 அடி. 400 கிலோ எடை கொண்டது. சாவியின் நீளம் 4 அடி. இந்த பூட்டில் ராமர் படம் வரையப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.
‘’ராமர் கோயிலுக்கு என் கையால் பூட்டு தயாரித்து கொடுக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அந்த கனவு நிறைவேறி விட்டது’என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார், சர்மா.
000