ஆகஸ்டு,11-

லாஸ்ஏஞ்சல்சில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் கடந்த மாதம்

நடிகர் கமலஹாசனும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும்

தற்செயலாக சந்தித்துக்கொண்டனர். அங்கு காட்ஃபாதர் படம் பார்த்தனர்.

இது தொடர்பான போட்டோக்கள் வெளிவந்தன.

 

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த

ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன் குறித்து பல்வேறு செய்திகளை

பகிர்ந்துள்ளார்.’’லாஸ்ஏஞ்சல்ஸில் உள்ள சைனீஸ் தியேட்டரில் நானும்

கமலும் ஓபன்ஹெய்மர் படம் பார்த்தோம். பின்னர் அவருக்கு

நான் விருந்தளித்தேன்’ என அவர் தெரிவித்தார்.

‘கமல்ஹாசன் ஹாலிவுட் படம் செய்ய வேண்டும்’ என தனது

ஆசையை வெளிப்படுத்திய ரஹ்மான் மேலும் கூறியதாவது:

 

‘’கமலஹாசனுக்கு உள்ள திறமைக்கு அவர் 20 ஆண்டுகளுக்கு

முன்பே ஹாலிவுட் சென்றிருக்க வேண்டும்,

ஆனால் தமிழ்சினிமாவிலேயே அவர் அடைப்பட்டுகிடந்து

விட்டார். இது அவரது தமிழ் ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயமாக

இருக்கலாம். ஆனால் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்

அல்ல.

இப்போது ஒன்றும்கெட்டுபோய்விடவில்லை.

ஒரு பரிசோதனை முயற்சியாக அவர் ஹாலிவுட் படம் செய்ய

வேண்டும். வெற்றி -தோல்வியை பற்றி கவலைப்பட

வேண்டாம்’’என மனம் திறந்திருக்கிறார் இசைப்புயல்.

உலக நாயகன் என்ன நினைக்கிறாரோ ?

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *