தலைப்புச் செய்திகள் (15-08-2023 )

* நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்… டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.

* ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுக்காக துணை நிற்கிறது… செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு.

* மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்… மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக மோடி தகவல்.

* கொரோனா காலத்திற்குப் பிறகு உலகத்தையே இந்தியா தான் வழிநடத்துகிறது…உலகம் நிலைத்தன்மையுடன் இயங்குவதற்கு இந்தியா தான் காரணமாக உள்ளது என்று மோடி பெருமிதம்.

* இந்தியா என்பது ஒரே கலாசாரம், ஒரே வரலாறு, ஒரே மதம் கிடையாது; அனைத்தும் கலந்ததுதான் இந்தியா…அன்புக்குரிய பாரத மாதா ஒரு நிலத்தைக் குறிப்பது மட்டும் அல்ல; அது ஒவ்வொரு இந்தியரின் குரல் என்று ராகுல் காந்தி கருத்து.

* சுதந்திர தினத்தையொட்டி 3வது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… 400 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றுவதில் பெருமை அடைவதாக உரை.

* கலைஞர் நூற்றாண்டில் கோட்டையில் கொடி ஏற்றுவதை பெருமையாக கருதுகிறேன்… கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

* தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்…சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு.

* ஒரு கோடி மகளிர் மாதம்தோறும் பயனடையும் வகையில் ’கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் … அடுத்த மாதம் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்பட இருப்பதாக ஸ்டாலின் பேச்சு.

* தண்டனை அளவில் 66 சதவீதத்தை அனுபவித்த 19 கைதிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை.. தமிழக அரசு நடவடிக்கை.

* தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது…-கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி

* மேகதாது அணை இருந்தால் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்க முடியும்… தமிழ்நாட்டுக்கு தண்ணி தர தான் மேகதாது அணை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விளக்கம்.

* அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சரியான மருத்துவம் அளிக்க வேண்டும்… தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தி.மு.க. அரசு கடும் நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

* மகாவதார் பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் தியானம்… 2 மணி நேர மலையேற்றத்திற்கு பின் குகையில் தியானம்.

* கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வெறிநாய்க்கடி சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார்… உயிரோடு இருந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பு கூறியதால் அதிர்ச்சி.

* இந்தியாவில் அக்டோபர் 5 -ஆம் தேதி முதல் நவம்பர் 19 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்… ஆன்லைனில் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு.

* பெண்கள் உலக கோப்பை கால்பந்து.. ஸ்வீடனை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *