ஆகஸ்டு,16-
நந்தா- பிதாமகன் படங்களை தொடர்ந்து இயக்குநர்
பாலாவும், நடிகர் சூர்யாவும் ‘வணங்கான்’படத்துக்காக
இணைந்தனர். சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஜோடியாக நடிக்க,
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கன்னியாகுமரியில் இதன் முதல்
கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. சில நாட்களில்
பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்துவேறுபாடு
ஏற்பட்டது. முட்டல்-மோதல் விரிந்து பரந்ததால், படத்தில்
இருந்து சூர்யா விலகிகொண்டார்.
‘இந்தக் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களால், சூர்யாவுக்கு
இது உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டது. இதனால்
இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என
ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்’ என்று இயக்குநர் பாலா
அறிக்கை வெளியிட்டார்.
சூர்யா வேடத்தில் அருண் விஜயை ஒப்பந்தம் செய்து படத்தை
மீண்டும் ஆரம்பித்தார், பாலா. கதாநாயகியாக ரோஷிணி
பிரகாஷ் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின்
தோன்றுகிறார்.
வணங்கான் ஷுட்டிங் இப்போது சென்னையில்
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதன் இறுதிக்கட்ட
படப்பிடிப்பு விரைவில் திருவண்ணாமலையில்
தொடங்குகிறது. மொத்தம் 10 நாட்கள் படப்பிடிப்பு .
இதற்காக , பிரம்மாண்ட கிணறு தோண்டி, அரங்கு
அமைக்கப்பட இருக்கிறது. சுமார் 200 அடி ஆழம் கொண்ட
இந்த அரங்கில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்
படுகின்றன. இத்துடன் படப்பிடிப்பு முடிவடையும்.
000