தொகுதிப் பங்கீட்டை அமைதியாக முடித்தார் நிதிஷ்குமார்.

ஆகஸ்டு, 22-

முக்கியமான 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’எனும் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதுவரை இரண்டு ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ள நிலையில், இரு பிரதான கட்சிகள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ள.

மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தை ஆளும் மம்தா பான்ர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ், ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

இதுபோல் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சிகள் அணியில் தான் உள்ளது.

இது போன்ற சிக்கல்கள் ஏதும் பீகாரில் வந்து விடக்கூடாது என்று கருதிய அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், ஓசையில்லாமல் தொகுதி பங்கீட்டை முடித்து விட்டார். அங்கு மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. நிதிஷின் ஐக்கிய ஜனாதா தளம் 15 இடங்களிலும், லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. 15 இடங்களிலும் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது.

எஞ்சிய 10 தொகுதிகள் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.8 தொகுதிகளில் காங்கிரசும், தலா ஒரு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் ( எம்.எல்.) கட்சியும் போட்டியிடும்.

கடந்த தேர்தலில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களில் வென்றிருந்தது.ஆர்.ஜே.டி.ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை. கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தங்கள் கட்சி ஜெயித்த ஒரு இடத்தை நிதிஷ்குமார் விட்டுக்கொடுத்துள்ளார்.

ஆனால் கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்ட பெகுசாராய் தொகுதியை கேட்டு அடம் பிடிக்கிறது, காங்கிரஸ்.அந்த தொகுதியில் கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு தோற்றவர் கன்னையா குமார். அவர் இப்போது காங்கிரசுக்கு வந்து விட்டார்.அவரை காரிய கமிட்டி உறுப்பினராக உயர்த்தியுள்ள காங்கிரஸ், பெகுசாராய் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்துள்ளது.

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ, ’அது எங்கள் தொகுதி.விட்டுத்தரமாட்டோம்’ என தீர்மானமாக சொல்லி விட்டது. நிதிஷ், இப்போது பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *