சாதிக்குமா இஸ்ரோ, உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பு.

ஆகஸ்டு,22-

தேர்தல் முடிவுகளை அறிவதற்கு நிலவக்கூடிய எதிர்ப்பார்ப்பை போன்று சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை நிலவில் தறையிறங்குமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டு உள்ளத. லேண்டரை  நாளை மாலை 6 மணி நான்கு நிமிடத்திற்கு நிலவில் தரையிறக்குவது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

நிலவின் தென் திசையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் என்ற ஆய்வுக் கலம் கடந்த 17-ம் தேதி வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது.

இதன் பிறகு நிலவுக்கு வெகு அருகில் சுற்றும் படி இயக்கப்பட்டு உள்ள லேண்டரின் வேகமும் படிப்படியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.  இதையடுத்து லேண்டர் நிலவின் மேற்பரப்பை படம் எடுத்து அனுப்பி உள்ளது.  அந்தப் படங்களின் அடிப்படையில் நிலவில் லேண்டர் இறங்க வேண்டிய இடத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து வருகின்றனர்

லேண்டரை இந்திய நேரப்படி நாளை ( புதன் கிழமை) மலை 5.20 மணி முதல் 6.04 மணியளவில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

இ்ஸ்ரோ  முதன் முதலில் இயக்கிய சந்திராயன்-1 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.  அதன் பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட சந்திராயன் – 2 கடைசி நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்ததால் நிலவிலேயே விழுந்து நொறுங்கி விட்டது. இதனால் அதை விட மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் மூலம் சந்திரயான் – 3 விண்கலத்தை உருவாக்கி அனுப்பி இருக்கிறது இ்ஸ்ரோ.

மேலும் அமெரிக்கா போன்ற நாடுகள் நிலவின் வடக்குப் பகுதியில் தான் தங்கள் விண்கலத்தை இறக்கி ஆய்வு செய்து உள்ளன. தெற்குப் பகுதிக்கு ரஷ்யா அனுப்பிய லூ னா 25 என்ற விண்கலம் நேற்று முன் தினம் கட்டுப்பாடடை இழந்துவிட்டது. அதனால் இந்தியாவின் விக்ரம் லேண்டர்தான் நிலவின் தெற்குப் பகுதியில் இறக்கப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையை பெற உள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் காட்சியை நேரலையில் பொதுமக்கள் பார்ப்பதற்கும் இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. இஸ்ரோவின் யூடியூப், பேஸ்புக் போன்ற வலைதளங்களில் பொது மக்கள் நேரடியா பார்க்கலாம்.

காத்திருங்கள், இ்ஸ்ரோவின் ஆற்றலை காணலாம்.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *