*டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவில்லை … முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நியமனத்தை திருப்பிய அனுப்பியது பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்.
*தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்றத் தேவையில்லை .. பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு கடிதம் எழுதி ஆளுநர் அடுத்த அதிரடி.
*ஆளுநரை தேர்தலில் போட்டியிடச் சொல்லும் அமைச்சர் உதயநிதி டி.என்.பி.எஸ்.சி.யின் குருப்- 4 தேர்வை எழுதத் தயாரா ? அண்ணாமலை கேள்வி.
*சந்திராயன் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை திட்டமிட்டபடி நிலவில் நாளை மாலை தரையிறக்க இஸ்ரோ தீவிரம் .. லேண்டரின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக உள்ளது என்றும் விளக்கம்.
*நிலவை 70 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து படம் எடுத்து அனுப்பியது லேண்டர்.. நேரில் தென்படும் காட்சிகள் மூலம் தரையிறங்குவதற்கான இடத்தையும் தேர்வு செய்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல்
*விக்ரம் லேண்டர் நாளை மாலை தரையிறங்கும் காட்சியை நேரலையாக ஒளிபரப்ப திட்டம் .. இஸ்ரோவின் யூ டியூப் உள்ளிட்டவற்றின் வழியாக பொதுமக்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு.
*மதுரையில் அதிமுக மாநாட்டுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று புகார் .. சென்னையில் டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு.
*சென்னை மாநகரின் 384- வது தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு … மாநகராட்சி மாளிகையில் பள்ளி மாணவர்களி்ன் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
*மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம் மற்றும் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படு்த்தியதாக மருமகள் புகார் … போலீஸ் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்ததை அடுத்து சதாசிவம் குடும்பத்துடன் தலைமறைவு.
*திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாக அறிவிப்பு … திருக்குவளையில் கலைஞர் படித்தப் பள்ளிக்கூடத்தில் 25 – ஆம் தேதி காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க முடிவு.
*சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மோதலில் ஈடுப்பட்ட மாணவர்கள் 9 பேர் கைது … அனைவரையும் உடனே விடுதலை செய்துவிடுமாறு பெற்றோர் கதறல்.
*ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு இருந்த காரணங்கள் அனைத்தும் என்.எல்.சி.க்குப் பொறுந்தும் .. சுற்றுச் சூழலுக்கும் மாசு ஏற்படுத்தம் என்.எல்.சி.யை உடனடியாக மூடுமாறு அன்புமணி வலியுறுத்தல்.
*அயல் நாட்டில் ரூ 3 லட்சத்திற்கும் குறைவான சம்பளத்துடன் பணி செய்யும் போது உயிரிழந்து விடுகிறவர்களின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் திருமண உதவித்தொகை ..வெளிநாட்டிற்கு செல்லும் முன் அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு.
*சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம். தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர் . ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்றம் முடிவு … இரண்டு வழக்குகளையும் நாளை விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் அறிவிப்பு.
*என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு… தங்களது கோரிக்களைகளை 2 வாரத்தில் அளிக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நீதிபதி தண்டபாணி ஆனை.
*காவிரியிர் தண்ணீர் திறந்துவிடக்கோரும் தமிழக அரசின் மனுவை விசாரிக்க நீதிபதி கவாய் தலைமையில் 3 நீதிபதிகள் பெஞ்ச் அமைப்பு … தமிழ்நாட்டின் மனுவை 25 விசாரிப்பதாக மூன்று நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு.
*செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதல் சுற்று சமனில் முடிந்ததால் நாளை இரண்டாவது சுற்று … இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் நார்வேயின் கார்ல்சன் இறுதிப்போட்டி களத்தில் உள்ளனர்
*தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் 15- வது பிரிக்ஸ் உச்சி மாநாடு ஆரம்பம் .. பிரதமர் மோடி மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்.
*லட்சத் தீவு எம்.பி.முகமது பைசல் மீதான கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை கேரள உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்தது ரத்து .. ஆறு மாதத்திற்குள் விசாரணை நடத்தி புதிய உத்தரவை பிறப்பிக்குமாறு கேரள உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் எம்.பி.பதவியில தொடரலாம் என்று தீர்ப்பு.
*மாஸ்கோ நகரத்தின் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை வீசித் தாக்குதல் .. நள்ளிரவில் வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதால் பதற்றம்.
*எத்தியோப்பிய நாட்டில் இருந்து நுழைய முயன்ற நூற்றுக்கும் அதிகமானவர்கள், சவூதி எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொலை .. சிதறிக் கிடக்கும் மனித உடல்களின் காட்சியை வெளியிட்டு ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றச்சாட்டு.