தலைப்புச் செய்திகள் (23-08-2023)

* நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி உலக சாதனை படைத்தது இந்தியா…விக்ரம் லேண்டர் எந்தவித இடையூறும் இல்லாமல் பத்திரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3.

*சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது…அமெரிக்கா, ரஷியா, சீனா சீ உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை.

*சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு… ஆரவாரத்துடன் வெற்றியை கொண்டாடிய இஸ்ரோ விஞ்ஞானிகள். ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

*சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதால், புதிய இந்தியா உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்… சரித்திர சாதனைகள் படைத்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு.

*சந்திரயான் 3 வெற்றிக்கு உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நன்றி… நிலா நிலா ஓடிவா என பாடும் பாடலை விஞ்ஞானிகள் மெய்பித்துள்ளதாக பேச்சு.

*அமைச்சர்கள் தங்கம்.தென்னரசு , கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து செப்டம்பர் 20- ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் … தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு.

*ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் அமைச்சர்கள் இரண்டு பேரையும் விடுவித்த தீர்ப்பு ஒரே மாதிரியாக உள்ளது ..தீர்ப்பை படித்ததும் மூன்று நாட்கள் தூக்கம் வரவில்லை என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து.

*சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் இருந்த அமைச்சர்கள் இருவருக்கும் மீண்டும் சிக்கல் .. மறுவிசாரணையில் தண்டனை கிடைத்து சிறை சென்றால் அமைச்சசர் பதவியையும் இழக்க வேண்டிய ஆபத்து.

*கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் சமசரம் எதுவும் செய்து கொள்ளக்கூடாது ..பெங்களூரில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்த்தில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தல்.

*நாகப்பட்டினத்தில் இருந்து சென்ற மீனவர்கள் 3 பேர் மீது நடுக்கடலில் கடற்கொள்ளையர் தாக்குதல் .. வாக்கிடாக்கி, செல்போன் உட்பட படகில் இருந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல்.

*திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் தமிழக காவல் துறையின் கடலோர பாதுகாப்பு குழு செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது .. மீனவர்களை கடற்கொள்ளையரிடம் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் பாதுக்காக்கத் தவறி விட்டதாக எடப்பாடி பழனிசாமி புகார்.

*மூன்றாம் பாலினத்தவருக்கு பட்டா வழங்கியதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய நைனார் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தகுதி செய்ய வேண்டும் … கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

*திருநங்கைகளின் உரிமைகளை நிலைநாட்டுவதையும் தகுதி அடிப்படையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவதையும் கட்டாயம் ஆக்குவது அவசியம் .. திருவிழாக்களில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும் உயர் நீதி மன்றம் ஆணை.

*எதிர்க்காலத்தில் உலகத்தின் வளர்ச்சி என்ஜினாக இந்தியா விளங்கும் .. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.

*இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமனம்.. புரிந்து உணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சச்சின், வாக்களிப்பதில் உலகத்திலலே இந்தியா பொறுப்புள்ள நாடாக திகழ்கிறது என்று கருத்து.

*இமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் மேலும் பல இடங்களில் நிலச்சரிவு .. சிம்லா, மண்டி போன்ற மாவட்டங்களில் போக்குவரத்து முற்றிலும் முடக்கம்.

*மிசோரம் மாநிலத்தில் கட்டிக் கொண்டிருந்த போது ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த பரிதாபம் .. மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு நடவடிக்கை தீவிரம்.

*அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லிக்கு செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பயணம் .. ஜி- 20 மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜின் பிங்கும் டெல்லி வருவதால் பாதுகாப்பு அதிகரிப்பு.

*டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை ஒரே நேரத்தில்,ஒரே ஓடு பாதையில் இரண்டு விஸ்தார விமானங்களில் ஒன்று இறங்கவும் மற்றொன்று புறப்படுவதற்கும் அனுமதி வழங்கி குழப்பம் … கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதால் மிகப்பெரிய அசாம்பாவிதம் தவிர்ப்பு.

*கொடைக்கானலில் நடிகர்கர் பிரகாஷ் ராஜ், பாபி சிம்கா கட்டி வரும் வீடுகளுக்காக பொது இடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தப்படுவதாக வருவாய் கேட்டாட்சியர் தகவல் .. தவறாக மின் இணைப்பு பெற்று உள்ளதாக கூறப்படும் புகாருக்கு மின்வாரியம் மறுப்பு.

*செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் 2வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது… டைபிரேக் போட்டியில் மகுடம் சூடப்போவது பிரக்ஞானந்தாவா? கார்ல்சனா? என்பது நாளை முடிவாகும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *