ஆகஸ்டு, 25-
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் எதிரான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதை அடுத்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் வந்து விட்டது.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வத்தை கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது. இதன் பிறகு அதிமுக பொதுச் செயளாலராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கக்கேோரி ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் ஆர்.மகாதேவன் , முகமது சபீக் அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
கடந்தாண்டு சென்னையில் நடை பெற்ற அதிமுக பொதுக்குழுவி்ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், மேலும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து செல்லும் என்றும் தீர்ப்பில் அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த தீர்ப்பு எடப்பாடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும், சேலத்தில் கருத்து தெரிவித்த அவர், நீதிக்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும் என்றும் எடப்பாடி தெரிவித்து இருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியதை உயர்நீதிமன்றம் அங்கீகரித்து உள்ளது. எனவே இனி அவர் அதிமுகவின் பெயரையோ கொடியை பயன்படுத்தினால் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரித்து இருக்கிறார்.
இதற்கு ஓ.பன்னீர் செல்வம் என்ன சொல்வாரோ !
000