தலைப்புச் செய்திகள் (26-08-2023)

* மதுரையில் நின்று கொண்டிருந்த ரயில் தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் உயிரிழந்த பரிதாபம் .. உத்திரபிரதேசத்தில் இருந்து ஆன்மீக பயணம் வந்தவர்கள் சிலிண்டரை பற்றவைத்து சமையல் செய்தபோது வெடித்த தால் விபத்து.

* ரயில் தீவிபத்தில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி … லக்னோவில் இருந்து ரயிலில் வந்தவர்கள் ராமேஷ்வரம் செல்வதற்கு ரயில் பெட்டியில் தங்கியிருந்த போது விபரீதம்.

* மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் … இறந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ 3 லட்சம் நிதி உதவி. ..

* மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரயில்வே காவல்துறை வழக்கு பதிவு… டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னோ காவல்துறைக்கு தெற்கு ரயில்வே உத்தரவு

* உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.. விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவு.

* லாரிகளில் தண்ணீர் எடுக்க அனுமதி கோரி ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்… தனியார் தண்ணீர் லாரி சங்க உரிமையாளர் சங்கம் முடிவு.

* நிலவில் சந்திரயான்-3ன் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு… நிலவில் சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்றும் பெயர் சூட்டினார் பிரதமர்.

* கிரீஸ் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பெங்களூர் வந்தடைந்தார் மோடி … இஸ்ரோ மையத்திற்கு சென்று சந்திராயனை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து.

* நாடு முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில், முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியானது…. தகுதியுள்ளவர்கள், www.gate2024.iisc.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

* சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தை செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம் … அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனர் நிலேஷ் எம்.தேசாய் தகவல்.

* திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு டிசம்பர் 17-ஆம் தேதி சேலத்தில் நடைபெறும்…. திமுக தலைமை அறிவிப்பு.

* தமிழ்நாடு காவல்துறையில் 621 உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ….தேர்வெழுத வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின் அனுமதி, மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு .

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *