ஆகஸ்டு,29-

தமிழ் சினிமா இயக்குநர்கள், தங்கள் வாரிசுகளை,நடிகர்களாக களம் இறக்குவதில் தான் ஆர்வம் காட்டுவதுவழக்கம். பாரதிராஜா மகன் மனோஜ், பாக்யராஜ் மகன்சாந்தனு, கஸ்தூரி ராஜா மகன் தனுஷ், பாண்டியராஜன் மகன்பிருத்வி ராஜன், பி.வாசு மகன் சக்தி ஆகியோர் உதாரண
புருஷர்கள்.

டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரும், தனது மகன் விஜயை இயக்குநர் ஆக்காமல், ஹீரோ ஆக்கினார் .அவர் இன்றைக்கு,ரஜினி, கமலை மிஞ்சி, சம்பளம்
வாங்குகிறார்.அரசியலில் குதித்து முதல்வர் ஆகும் திட்டமும் உண்டு. ஆனால் அவர் தனது மகனை ஹீரோவாக்க
விரும்பவில்லை.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய், சென்னையில் தனது கல்லூரி படிப்பு முடித்த பிறகு கனடா சென்றார். அங்கு திரைப்பட இயக்கம், திரைக்கதை அமைப்பு மற்றும் சினிமா தொழில் நுட்பம் தொடர்பான படிப்புகளை படித்து வந்தார். பிறகு ஆங்கிலத்தில் குறும் படங்களையும் இயக்கினார். ஜேசன் சஞ்சய்க்கு சிறு வயது முதலே ,தாத்தைவை போன்று இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.. அவர் வளர்ந்ததும் அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் வரத்
தொடங்கின. ஆனால் அதையெல்லாம் ஜேசன் மறுத்து வந்தார். அவரும் தனது அப்பாவைப் போலவே ஹீரோ ஆகிவிடுவார் என கோடம்பாக்கம் நினைத்தது.. ஆனால் சஞ்சய், டைரக்‌ஷன் துறையை தேர்வு செய்திருக்கிறார்..

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தை கதை, திரைக்கதை எழுதி ஜேசன் சஞ்சய் இயக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.அப்போது  என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் நடிக்க இருக்கும் ஹீரோ,ஹீரோயின், மற்ற நட்சத்திரங்கள், பிற டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது’ என்றார்.

‘விஜய்யின் மகனை அறிமுகப்படுத்துவது சந்தோஷமாக
உள்ளது. அவர் சொன்ன கதை எங்களுக்கு பிடித்திருந்தது’
என்றார், லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன்.
அப்பாவை இயக்குவீங்களா, சஞ்சய் சார்?

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *