இந்தியா கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுமா? சேருமா?

ஆகஸ்டு,30-

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம்

பெங்களூருவிலும் நடைபெற்றது. மூன்றாவது கூட்டம் நாளை (வியாழக்கிழமை )மும்பையில் நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஏற்கனவே 26 கட்சிகள் உள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் மும்பை கூட்டத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர்

சூட்டப்பட்டுள்ளது., மும்பையில் நடைபெறும் கூட்டத்தில், கூட்டணியின் புதிய லோகோ வெளியிடப்பட உள்ளது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது உள்ளிட்ட விஷயங்கள்

குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட நிலையில் அந்த பதவி மீது தனக்கு ஆசை இல்லை என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அந்த பதவிக்கு வேறு நபர்கள் நியமிக்கப்படுவார்கள்.அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து,அனைவரும் ஒன்றாக போட்டியிடுவதை மட்டுமே நான் விரும்புகிறேன். இந்த அணியில் மேலும் சில அரசியல் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது.. தேர்தலுக்கு முன் அதிகபட்ச கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறேன். அதனை நோக்கி பயணித்து வருகிறேன்’என தெரிவித்தார்.

கூடுதல் கட்சிகள் இணைவது ஒரு பக்கம் இருக்கட்டும். கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், விலகாமல் இருப்பதை முதலில் உறுதி செய்யுங்கள், ஜி.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *