செப்டம்பர்,08-
தென்காசி மாவட்டத்தில் மட்டுமல்ல தென் தமிழ்நாட்டிலும் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் மையமாக இருப்பது,குற்றாலம். ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்கள், இங்கு சீசன் காலம் ஆகும்.குளிர் தென்றலோடு ஒட்டி வரும் சாரல் துளிகள் மனதுக்கும், உடலுக்கும் இதமளிப்பவை.
இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லாததால் சீசன் களை கட்டவில்லை.அருவிகளில் எப்போதவது மட்டுமே தண்ணீர் கொட்டியது.வெயிலும் சுட்டெறித்தது. வெளியூர்களில் இருந்துவந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நான்கு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ,ஆனந்த நீராடிசெல்கின்றனர். உச்சக்கட்ட சீசனை அனுபவிக்க மக்கள் கூட்டம் குற்றாலத்தில் அலை மோதுகிறது.சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் பயணிகள் எண்ணிக்கைமேலும் அதிகரிக்கும்.வியாபாரிகள், கடைக்காரர்கள், ஓட்டல் வைத்திருப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
000