தலைப்புச் செய்திகள் (13-09-2023)

*கர்நாடக மாநில அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று பெங்களூரில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்.. கூட்ட முடிவை ஒழுங்காற்றுக் குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க முடிவு.

*தமிழ்நாட்டின் முன்னணி மணல் ஒப்பந்ததாரர்கள் திண்டுக்கல் ரத்தினம் மற்றும் புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை .. மதிப்பீட்டாளர்களை அழைத்து நகைகளின் மதிப்பு கணக்கெடுப்பு.

*மணல் குவாரிகளில் அதிக மணல் எடுத்து விற்பதற்கு யார்,யாருக்கு லஞ்சம் கொடுத்ததார்கள் என்பதற்கான ஆதராங்களை திரட்ட நடவடிக்கை… வங்கிகளில் உள்ள லாக்கர்களை திறந்து காட்டச் சொல்லியும் சோதனை.

*சென்னை தியாகராயர் நகர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்ய நராயணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தாக மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு .. ஆதராங்களை திரட்டுவதற்கு சென்னையில் 18 இடங்களில் சோதனை.

*தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் அடுத்த மாதம் 16 – ஆம் தேதி கூட உள்ளதாக தகவல் .. ஐந்து நாட்கள் கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்ப்பு.

*கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்ததன் எதிரொலி .. தமிழ் நாட்டில் எல்லை ஓர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்.

*டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி குடியரசுத் துணைத்தலைவர் தன்கருடன் சந்திப்பு. . தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து விளக்கம்.

*புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த காயத்ரி என்ற மாணவியும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்த மீரோஷினி என்ற பெண்ணும் இறப்பு ..அடுத்தடுத்து இரண்டு பேர் மரணமடைந்தால் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

*கடந்த 2016 தேர்தலின் போது ரூ 3.21 கோடி சொத்துக் கணக்கு காட்டிய சத்தியா 2021 தேர்தலின் போது ரூ 16 கோடி சொத்து இருப்பதாக கணக்கு காட்டியதாக வழக்கு .. திடீரென வருமானம் கூடியது எப்படி என்று விசாரணை.

*இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ் நாட்டில் 40 இடங்களிலும் வெல்ல வேண்டும் … மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடித்து உள்ளதை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் பேச்சு.

*அதிமுக ஆட்சியைப் போன்று தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த திமுகவுக்கு தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம்… போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாததால் இளைஞகள் அதற்கு அடிமையாவதால் குற்றச் செயல்கள் அதிமாகிறது என்றும் புகார்.

*கலைஞர் உரிமைத் தொகைப் பெற தேர்வு செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஒரு ரூபாய் மட்டும் அனுப்பி சோதனை … செப்டம்பர் 15 ஆம் தேதி அனுப்பப்படும் உரிமைத் தொகை போய் சேருமா என்பதை அறிந்திட நடவடிக்கை.

*சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லுமாறு விநாயகர் கேட்காத நிலையில் ஊர்வலங்கள் நடத்துவதால் யாருக்கு என்ன பயன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி.. கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களில் விநாயகர் சிலை வைக்கவும் ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரும் வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து.

*எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்..அமித் ஷா மற்றும் நட்டாவை சந்தித்து தொகுதிப் பங்கீடு பேச உள்ளதாக தகவல்.

*அனைத்து அமைப்புகளுக்கும் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்படுவதாக தமிழநாடு அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் .. அரசாணைக்கு மாறாக சிலை வைக்க அனுமதி கேட்டால் தரப்படுவதில்லை என்றும் அரசு வழக்கறிஞர் விளக்கம்.

*திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அண்ணாமலை அறிக்கை.. ஊட்டச்சத்துப் பெட்டகம்,மெட்ரோ ரயில், அறநிலையத் துறை ஆகியவற்றில் நடந்துள்ள ஊழல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதில் தரவேண்டும் என்று வலியுறுத்தல்.

*நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரத்தில் வீட்டில் தனியாக இருந்த ராஜேஷ் என்ற மாற்றுத்திறனாளி கை கால்களை கட்டி எரித்துக் கொலை… போலீஸ் விசாரணை.

*சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசைக்கச்சேரியில் டிக்கெட் இருந்தும் அரங்கத்திற்குள் நுழைய முடியாதவர்களுக்கு பணத்தை திருப்பித் தரும் நடவடிக்கை ஆரம்பம் … குளறுபடிகளுக்கு காரணமான ஏசிடிசி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

*ஏ.ஆர்.ரகுமான் இசைநிகழச்சிக்கு அனுமதி கோரிய நிறுவனத்தின் கடிதத்தை வெளியிட்டது சென்னை காவல் துறை .. 20 ஆயிரம் பேர் வருவார்கள் என்று அனுமதி வாங்கிவிட்டு 43 ஆயிரம் பேருக்கு டிக்கெட் கொடுத்தது அம்பலம்.

*வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சமையல் சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பு .. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்.

*நாடளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத் திட்டம் குறித்து இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை .. டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் 14 பேரும் பங்கேற்பு.

*ராஜஸ்தான் மாநிலத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து… 11 பேர் உயிரிழந்த பரிதாபம். 12 பேர் படுகாயம்.

*மத்திய பிரதேச மாநிலத்தில் நிலத்தகறாரில் இரு சமூகத்தினர் மோதல் … துப்பாக்கிச் சண்டையில் 5 பேர் இறப்பு.

*லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டக் கொடூரம் …5,200 பேர் உயிரிழந்ததாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தகவல்.

*ரஷ்ய அதிபர் விளாடிமிர் புத்தினுடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு. . ஆயுதங்களைக் கொடுப்பது பற்றி வடகொரிய தரப்பில் விளக்கம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *