தலைப்புச் செய்திகள் (15-09-2023)

*மணல் கடத்தல், மணல் சுரங்கங்கள் முறைகேடு தொடர்பாக கடந்த 4 நாட்களாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவு … கணக்கில் காட்டப்படாத ரூ 15 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம், ஏரளாமான ஆவணக்ஙள் பறிமுதல்.

*மொறப்ப நாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மணற் கொள்ளயர்கள் ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை … தலா ரூ 3 அபாரதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.

*சுற்றுச் சூழலால் பாதிக்கப்படாத பொருட்களால் விநாயகர் சிலை செய்யப்பட்டு இருக்க வேண்டும்,, பிளாஸ்டிக்,தெர்மாக் கோல் போன்றவற்றால் சிலைகள் செயப்பட்டு இருக்கக் கூடாது.. விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு விளக்கம்.

*அனுமதி பெற்று உரிய இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே பாதுகாப்பு தரப்படும் ..காவல் துறைத் தலைவர் சங்கர் ஜிவால் அறிவிப்பு

*செந்தில் பாலாஜி காவல் மேலும் 15 நாட்களுக்கு 6 -வது முறையாக நீடிப்பு .. புழல் சிறையில் மூன்று மாதங்களாக அடைக்கப்பட்டு உள்ள அமைச்சர் காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி முன் ஆஜர்.

*செந்தில் பாலாஜி மிகவும் சக்தி வாய்ந்த நபர் என்பதால் வெளியில் விட்டால் சாட்சிகளையும் ஆதராங்களையும் கலைத்து விடும் ஆபத்து உள்ளது.. அமைச்சர் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அமலாக்கத் துறை தரப்பு வாதம்.

* நீங்கள் ஏன் பாரதீய ஜனதாவில் சேர்ந்து விடக்கூடாது என்று செந்தில் பாலாஜியிடம் விசாரணையின் போது அமலாக்க துறை கேட்டதாக அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்.. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செப்டம்பர் 20 ஆம் தேதி தீாப்பு வழங்குவதாக அறிவிப்பு.

*கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . . திட்டத்தை தொடங்கி வைத்ததன் அடையாளமாக பெண்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கினார் முதல்வர்.

*ஒரு கோடி ஆறு லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கிற்கு ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது..மாதம் தோறும் 15- ஆம் தேதி பணம் கிடைக்கும் என்று அரசு விளக்கம்.

*தமிழ்நாடு என்ற பெயர் நீடிக்கும்வரை அண்ணா துரை ஆள்கிறார் என்று பொருள்.. எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்களோ அதுவரை தாம் ஆள்வதாக பொருள் என்று ஸ்டாலின் பேச்சு.

*மின்கட்டணம்,சொத்துவரி உட்பட அனைத்தையும் உயர்த்திவிட்டு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது விளம்பரத்துக்காக.. யானைப் பசிக்கு சோளப் பொறி போடுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.

*மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் தமிழ்நாட்டில் எதுவும் மாறப் போவதில்லை …பொது மக்களை இலவசத்திற்காக கை ஏந்த வைப்பதாகவும் சீமான் விமர்சனம்.

*அண்ணாவை பற்றி அண்ணாமலை மீண்டும் பேசினால் அதிமுக சார்பில் தக்க பதிலடி கொடுக்கபடும் என்று ஜெயக்குமார் எச்சரிக்கை ..நடக்காத ஒன்றை நடந்தாக பேசுவதாகவும் புகார்.

*திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தோட்டத்தில் நாட்டு வெடி தாயரித்த போது விபத்து … எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியதில் இளைஞர்கள் இரண்டு பேர் உயிழிப்பு.

*தமிழக அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனியாருக்கு துணை போவாதாக எடப்பாடி பழனிசாமி சந்தேகம் ..கொள் முதல் செய்த பாலுக்கான பணத்தை தராததால் பல லட்சம் விவசாயிகள் ஆவினுக்கு பால் தருவதை நிறுத்தி தனியாருக்குப் பால் கொடுப்பதாக புகார்.

*திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8 முறை ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் … பால் பொருட்களின் விலை அதிகரிப்பால் தீபாவளி இனிப்புப் பொருட்களின் விலையும் கூடும் என்று கருத்து.

*தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்த்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கில் ஜாமீன் கேட்ட ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு ஐந்தவாது முறையாக தள்ளுபடி .. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

*சென்னை கோயம் பேடு அருகே உள்ள மருத்துவமனை இடம் மெட்ரோ ரயிலுக்கு ஒதுக்கப்பட்ட பிறகும் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி காலி செய்ய மறுப்பு … ஒரு மாதத்திற்குள் காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பு .

*வீடு, நிலம் போன்ற சொத்துக்களை பத்திரப் பதிவு செய்யும் போது அது தொடர்பான புகைப்படங்களையும் இணைக்க வேண்டு்ம் .. புதிய முறை அக்டோபர் ஒன்று தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிப்பு.

*தமிழ்நாட்டில் பல்வேறு காய்ச்சலுக்காக உயிரிழப்பது தொடர்கிறது .. திருவாரூரில் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவர் உயிரிழந்த பரிதாபம்.

*ஓமன் நாட்டின் மஸ்கட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 13 கிலோ தங்கம் ,200 செல்போன்கள் உட்பட ரூ 14 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்.. ஒரே விமானத்தில் வந்த 113 பயணிகள் மீது வழக்குப் பதிவு .

*சென்னையில் இருந்து கொச்சி, கொல்கத்தா,மும்பை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டிய பத்து விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து .. போதிய பயணிகள் இல்லாததால் விமான நிறுவனங்கள் நடவடிக்கை.

*விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சந்திரபாபு நாயுடு மனு..செப்டம்பர் 19 – ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

*மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களாக நடக்கும் கலவரத்தில் இறந்தவர்கள் 175 பேர், 1108 பேர் காயம், 32 பேர் மாயம் … 4786 வீடுகளுக்கு தீ வைப்பு, 386 வழிப்பாடடுத் தளங்கள் சேதம் என்று காவல் துறை அறிக்கை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *