*தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டு தரவேண்டிய 103.5 டி.எம்.சி காவிரி நீரில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கர்நாடகம் தந்து உள்ளது.. மத்திய அரசிடமும் தவறான தகவலை கர்நாடகம் தெரிவித்து இருப்பதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
* ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் அமைச்சர் துரை முருகன் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மனு கொடுக்க இருப்பதாக ஸ்டாலின் தகவல்.. தமிழ் நாட்டுக்குத் தேவையான தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்திடம் வலியுறுத்த ஏற்பாடு.
*குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் …ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு ஒரு கோடியே ஆறு லட்சம் பேருக்கு மட்டும் வழங்கியது ஏன் என்றும் கேள்வி.
*சிலரை சில நாள் ஏமாற்றலாம், பலரை பல நாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கருத்து … திமுக பதவியேற்ற பிறகு இரண்டு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது மற்றும் கடந்த ஒரு மாதத்தில் அரிசி விலை இருபது ரூபாய் உயர்ந்து உள்ளதைக் குறிப்பிட்டு விமர்சனம்.
*மகளிர் உரிமைப் பெற தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கபட்டவர்கள் இ சேவை மையஙகள் மூலம் 18- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் .. தகுதியான ஆவணங்கள் இருந்தால் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு.
*கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் உயிரிழந்த ஜாமீஷா முபீனும் கைது செய்யப்பட்டவர்களும் கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள் என்று என்.ஐ.ஏ. தகவல்…அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுச செயல்படுவதாகவும் சந்தேகம்.
*கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள்,தொடர்பு உடையோர்களை குறி வைத்து தமிழ் நாட்டில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை.. சென்னை,தென்காசி மற்றும் கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் தீவிரவாதச் செயல்களுக்கு ஆதராங்கள் இருக்கிறதா என்று ஆய்வு.
*கடைய நல்லூரில் முகமது இத்திரிஸ் என்பர் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்.. கோவையில் திமுக கவுன்சிலர் முபஷிரா என்பவருடைய வீட்டில் இருந்த கணணி உள்ளிட்ட பொருட்களை சோதனைக்கு எடுத்துச் சென்றது என்.ஐ.ஏ.
*நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை எழுத்துப் பூர்வமான கடிதம் கொடுத்த நேற்று இரவு திரும்பப் பெற்றார் நடிகை விஜயலட்சுமி… சக்திவாய்ந்த மனிதரான சீமானை எதிர்த்து போராடும் சக்தியில்லை என்று பேட்டி.
*சீமானுக்கு எதிரான காவல் துறை நடவடிக்கையும் திருப்திகரமாக இல்லை, தனி ஒருவராக போராட முடியவில்லை என்று நடிகை புகார்.. பெங்களூரு பக்கம் சென்று விட உள்ளதாகவும் தகவல்.
*மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை .. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் மீது பேச வேண்டிய விதம் குறித்து கருத்துப் பரிமாற்றம்.
*இந்துக்களின் அன்றாட கடைமை உட்பட பல கடைமைகளின் தொகுப்புதான் சனாதனம் தருமம் .. சானாதனத்துக்கு எதிராக பேச வாருங்கள் என்று திருவாரூர் அரசுக் கலைக்கல்லூரி முதல்வர் வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபரி சேஷசாயி கருத்து.
*மழைக் காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்றுதான் என்று சுகாதராத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி .. திருவாரூரி்ல் மருத்துவர் இறந்தது டெங்குவால் இல்லை என்றும் விளக்கம்.
*புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் பத்து பேருக்கு டெங்கு காய்ச்சல் .. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு.
*ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி விஸ்வாவை சுட்டுக் கொன்றது காவல்துறை… விஸ்வா மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்தவரை பிடிக்க சென்ற போது தப்ப முயன்றதால் விபரீதம்.
*கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு… எடப்பாடி பழனிச்சாமி மனு செப்டம்பர் 19 ஆம் தேதி நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு பட்டியல்.
*சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் சுந்தரமூர்த்தி என்பவரை முதலை கடித்து இழுத்து சென்றது…. 4 மணி நேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு துறையினரால் சடலமாக மீட்பு.
*கோவையைச் சேர்ந்த ஈ.எஸ்.ஆர்.என்ற கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று நாட்களாக சோதனை நிறைவு.. கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்ட பணமும் ஆவணங்களும் ஸ்டேட் பேங்க் கரூவூலத்தில் ஒப்படைப்பு
*காங்கிரஸ் கட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட காரியக்கமிட்டி முதன் முதலாக ஐதராபாத்தில் கார்கே தலைமையில் கூடியது..தெலுங்கான, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை.
*பரப்பரப்பான வழக்குகளை மட்டுமே அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்பதும் சாதராண மக்களின் கருத்துகளை உச்சநீதிமன்றம் கேட்பதில்லை என்பதும் தவறு .. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் விளக்கம்.
*இலகு ரக வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற்றவர்கள் கனரக வாகனங்களை ஓட்டலாம் என்பதற்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது பற்றி சந்திர சூட் கருத்து .. மத்திய அரசின் உத்தரவால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவாகள் என்பதால் வழக்கு மாற்றப்பட்டதாக விளக்கம்.
*காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொலை…. தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு படை தகவல்.
*ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில நாளை இலங்கை அணியை எதிர்கொள்ள இந்தியா ஆயத்தம் .. கொழும்பு மைதானங்களில் இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சி.