தலைப்புச் செய்திகள் (20-09-2023)

*அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.. இப்போதைய நிலையில் ஜாமீன் தர முடியாது என்று அறிவித்த நீதிபதி அல்லி,ஜாமீன் மறுப்புக்கான காரணத்தை பின்னர் தெரிவிப்பதாக விளக்கம்.

*கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி 90 நாட்களுக்கு மேலாக சென்னை புழல் சிறையில் உள்ளார்.. வேலை கொடுப்பதாக கூறி பணம் வசூலித்த வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டவர் செந்தில் பாலாஜி.

*உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகியுடன் அமைச்சர் துரை முருகன் ஆலோசனை.. தமிழ்நாட்டு தரப்பில் முன்வைக்க வேண்டிய கருத்துகள் குறித்து விளக்கம்.

*காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை எந்த காலத்திலும் கர்நாடகம் ஏற்றுக் கொண்டதில்லை என்று துரைமுருன் புகார்.. கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியும் வசதி காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு உள்ளதாகவும் டெல்லியில் பேட்டி.

*முதலமைச்சர் சித்தராமய்யா தலைமையில் டெல்லியில் கர்நாடக மாநில எம்.பி.க்கள் ஆலோசனை… தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம்.

*காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்வதற்கு கர்நாடகம் முடிவு.. அணைகளில் உள்ள தண்ணீர் குடி நீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்று தெரிவிக்க திட்டம்.

*தமிழகத்தில் செங்கல்பட்டு, சென்னை , மேட்டூர் உட்பட ராதா இன்ஜினியரிங் குழுமம் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை… அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டுகளை வழங்கும் ஒப்பந்தத்தை பெற்று உள்ளது ராதா இன்ஜினியரிங்.

*தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின்நிலையங்களில் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் விலை, தரம் குறித்து ஆய்வு… நிறுவனம் தொடா்புடைய பல இடங்களில் விசாரணை.

*சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, ஆளுநர் ரவி அமைத்தக் குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை.. ஆளுநர் நியமித்த பல்கலைக் கழகக் குழு மானியக் குழு உறுப்பினரை பெயரை நீக்க அரசாணை.

*நாடாளுமன்றம் மற்றும் சட்டபேரபைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது…. மசோதாவுக்கு ஆதரவாக 454 பேரும், எதிராக 3 பேரும் வாக்களித்தனர்.

*நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்த தீங்கும் செய்ய மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்குமாறு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்… மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திமுக ஆதரிப்பதாகவும் அறிக்கை.

*தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9-ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு …நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும்” என்றும் உறுதி.

*கடந்த 1991 தேர்தலில் அதிமுக சார்பில் 31 பெண்களை எம்.எல்.ஏ. ஆக்கிய ஜெயலலிதா பின்னர் தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியவர் என்று எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.

*சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைப்பு .. தலைமை நீதிபதி அனுமதி பெற்றே இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விளக்கம்.

*சீமான் மீதான புகரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்று 11 ஆண்டுகளுக்குப் பிறகும் வழக்கை ரத்து செய்யாமல் வைத்திருந்தது ஏன் என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி .. நடிகையின் புகார் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்யவும் காவல் துறைக்கு உத்தரவு.

*மின் வாரியத்தின் கேங் மென் பணிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் தேர்வான 5,439 பேரும் தங்களுக்குப் பணி வழங்கக் கோரிக்கை… கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது.

*கேங்மென் பணிக்குத் தேர்வானவர்களுக்கு உடனே பணி வழங்குமாறு அண்ணாமலை வலியுறுத்தல் …திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் பணி கொடுக்காததால் ஐந்தாயிரம் குடும்பங்கள் பாதிக்கப் பட்டு உள்ளதாக புகார்.

*சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு புதுச்சேரி பேரவையில் பாராட்டு…. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக கூறி திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு.

*திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது…. பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களை அச்சுறுத்தும் சிறுத்தைகளைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில், இதுவரை 6 சிறுத்தைகள் சிக்கி உள்ளன.

*நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு ஒன்பது வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்த பல இடங்களில் உணவு விடுதிகளில் 2- வது நாளாக அதிகாரிகள் சோதனை … திருச்சி மற்றும் சேலத்தில் ஓட்டல்களில் இருந்து கெட்டுப்போன கோழிக்கறி பறிமுதல் செய்து அழிப்பு.

*திருச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு .. தேங்கி நிற்கும் நீரை அகற்ற அதிகாரிகள் உத்தரவு.

*நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்துமாறு நாடாளுமன்ற விவாதத்தில் சோனியா காந்தி வலியுறுத்தல் … பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு தருவது என்பது ராஜீவ் காந்தியின் கனவுத் திட்டம் என்றும் பேட்டி.

*மகளிர் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் பயன் பெறும் வகையில் உள் ஒதுக்கீடு அவசியம் என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு.. பாஜக அரசு கொண்டு வந்து உள்ள மசோதா முழுமையற்றதாக உள்ளது என்றும் புகார்.

*நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற உள் துறை அமைச்சர் அமித் ஷா மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா என்று கருத்து .. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கு நீதி கிடைத்து இருப்பதாகவும் பேச்சு.

*கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்… எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்குமாறு வேண்டுகோள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *