தலைப்புச் செய்திகள் (03-10-2023)

*தமிழ்நாட்டு கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு…. மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா என்றும் கேள்வி?

*ஒரு அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையும், சாதனையும் – சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…. பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்.

*குற்றங்களைக் குறைத்துவிட்டோம் என்பதாக அல்லாமல், குற்றம் நடைபெறாமல் தடுப்பதே தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும்… சமூக ஊடகங்களின் நிகழ்வுகளையும் கண்காணித்து, சாதி, மத உணர்வுகளைத் தூண்டக்கூடிய பிரச்னைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுமூகமான முறையில் தீர்வு காண அறிவுறுத்தல்.

*நேபாளத்தை மையமாகக் கொண்டு உருவான நிலநடுக்கம் டெல்லி, உத்தர்காண்ட் மாநிலங்களில் எதிரொலித்தது.. ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவான நில அதிர்வால் கட்டிடங்கள் குலுங்கி பொது மக்கள் பீதி.

*இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று விஞ்ஞானிகள் தேர்வு.. அணுக்கள் மூலக் கூறுகளுக்குள் இருக்கும் எலக்டரான்கள் பற்றிய சோதனைக்காக விருது பகிர்ந்தளிப்பு.

*சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் ஆறாவது நாளாக உண்ணாவிரதம்.. உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தில் மீண்டும் பங்கேற்பு.

*ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவொளி நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி.. நிதிப்பற்றாக் குறை காரணமாக தொகுப்பூதியம் வழங்க அரசால் முடியாது என்று கூறியதால் போராட்டத்தை தொடர முடிவு.

*கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களை அறவே ஒழிப்பதுடன் அது தொடர்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. .. சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

*சர்க்கரையை பேப்பரில் எழுதி விட்டு அது இனிக்கும் என்பது போல பாஜக அரசு மகளிர் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து உள்ளது… திருச்சிக்கு வந்திருந்த தேசிய மாதர் சம்மேளனத் தலைவர் ஆணி ராஜா விமர்சனம்.

*கோயம்புத்தூர் வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமனுடன் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் சந்திப்பு.. தங்கள் தொகுதி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிக்க சந்தித்ததாக விளக்கம்.

*பீகார் மாநில அரசைப் போன்று தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தல்.. தனியார் துறையில் இட ஒதுக்கீடுக் கிடைக்க சட்டம் இயற்றவும் கோரிக்கை.

*இனியும் காலந்தாழ்த்தாமல் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை.. சமூக நீதியை முறையாக செயல்படுத்துவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று அறிக்கை.

*சென்னை அமைந்தகரையில் நாளை மறுதினம் அண்ணாமலை தலைமையில் பாஜக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. இன்று நடை பெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிப்பு.

*சென்னை புறநகர் ரயில்கள் ஒவ்வொன்றிலும் மூன்று குளிர்சாதனப் பெட்டிகளை இன்னும் மூன்று மாதங்களில் இணைக்கத் திட்டம் .. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தின் பரிந்துரையை ஏற்று தெற்கு ரயில்வே நடவடிக்கை.

*கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேருந்து நிலையத்தில் பள்ளி செல்வதற்கு காத்திருந்த ஜீவா என்ற பிளஸ் 2 மாணவன் கத்தியால் குத்திக் கொலை.. படுபாதகத்தில் ஈடுபட்ட ஆனந்த் என்ற பொறியாளரைக் கண்டு பிடிக்க போலீஸ் தீவிரம்.

*ராமேஷ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் ராமர் பாலத்தை தரிசனம் செய்வதற்காக சுவர் ஒன்றை கட்ட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.. ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வலியுறுத்திய கோரிக்கையும் நிராகரிப்பு.

*அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் காவல் துறை அதிகாரி பல் பீர் சிங்கால் பல் பிடுங்கப்பட்ட இரண்டு பேர் நிவாரணம் கேட்டு வழக்கு .. நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

*மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிய வழக்கி்ல் கைது செய்யப்பட்ட பிரபல யூ டியபூர் வாசனின் சிறைக் காவல் மேலும் 15 நாடகளுக்கு நீடிப்பு.. வாசன் தரப்பில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

*மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமைகளை வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்… சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் விரும்புகிறதா என்று கேள்வி.

*இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் 40 பேரை அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் அழைத்துக் கொள்ளுமாறு கனடாவுக்கு உத்தரவு .. காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டியதை அடுத்து இந்தியா நடவடிக்கை.

*மராட்டிய மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களில் உயிரிழந்த நோயாளிகள் எண்ணிக்கை 30- ஐ தாண்டியது.. மேலும் 70 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை.

*அமிர்தசரஸ் பொற்கோவிலில் இரண்டாவது நாளாக பாத்திரங்களை சுத்தம் செய்தார் ராகுல் காந்தி…. அன்னதானம் நடைபெறும் இடத்திற்குச் சென்று காய்கறிகளை நறுக்கிக் கொடுத்து சேவை.

*அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்து புகாரின் பேரில் மேலும் 800 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வாஸ் தகவல் .. கடந்த பிப்ரவரியில் ஆயிரத்துக்கு அதிமானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட நடவடிக்கை.

*கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை.. கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.

*மன்னர் வளைகுடாவில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கை எதிரொலி.. தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் பிடிச் தொழில் பாதிப்பு.

*கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு.. அரசு அறிவிப்பு காரணமாக பள்ளிகள் மூடல்.

*இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்குடன் புகார்…. 15 நாட்களுக்குள் ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும்; பொது மன்னிப்பு கேட்க வேண்டும் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் வக்கீல் நோட்டீஸ்.

*சிவகாசி அருகே கங்கசெவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் தீ விபத்து… மூவர் படுகாயம்… அரசு மருத்துவமனையில் அனுமதி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *