தலைப்புச் செய்திகள் (04-10-2023)

*காவிரி ஒழுங்காற்றுக் குழு அக்டோபர் 12- ஆம் தேதி டெல்லியில் கூட உள்ளதாக அறிவிப்பு .. கடந்த 29- ஆம் தேதி கூட்டத்தில் விநாடிக்கு மூன்றாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடகம் தாக்கல் செய்துள்ள மனு பற்றி விவாதிக்க முடிவு.

*சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல், வனத்துறை தலைவர்கள் கூட்டம் … நலத்திட்டங்கள், போதைப் பொருட்கள் தடுப்பு, சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசனை.

*பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்ற அதிமுக தீர்மானத்தில் மாற்றம் இல்லை என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி .. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று நம்பிக்கை.

*பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று பாஜக தலைமையிடம் கோரிக்கை வைக்கவில்லை… சேலம் பேட்டியில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்.

*அக்டோபர் 6- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் மீண்டும் 16- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு .. பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிப்பு.

*தமிழ் நாட்டிற்கு வரும் மத்திய அமைச்சர்கள் நிகழச்சகிளில் திமுக அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.. கோவையில் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் பங்கேற்றது பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்கம்.

*கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது தொகுதி மேம்பாடு பற்றி பேசுவதற்காகத்தான் .. பாஜசு எம்.எல்.ஏ. வானதி சீனுவாசன் பேட்டி.

*புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதிப்பது தொடர்பாக மருத்துவ ஆணையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பை நிறுத்தி வைக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் .. மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பால் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவது பாதிக்கப்படும் என்று கருத்து.

*கோவையில் 1998- ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு ஜாமீன் கொடுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு .. 25 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் விடுவிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று தீர்ப்பு.

*பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படு்ம் புரவாங்கரா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் வருமான வரிச் சோதனை .. வரி ஏய்ப்புச் செய்ததாக கிடைத்த புகாரின் பேரில் நடவடிக்கை.

*சம வேலைக்கு சம ஊதியம் வழங்குமாறு கோரிக்கை .. சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் ஆசியர் சங்கத்தினர் ஏழாவது நாளாக உண்ணாவிரதம்.

*திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு.. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை ஆஜராகிறார் அண்ணாமலை.

*சென்னையில் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாலை இரண்டு மணி முதல் நான்கு மணி நேரத்திற்கு இணைய தள சேவை பாதிப்பு … பல் வேறு நாடுகளுக்கு புறப்பட வேண்டிய 20 விமானங்கள் இரண்டு மணி நேரம் தாமதம்.

*சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுகு உத்தரவிட முடியாது .. பொது நல மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்.

*மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாண வெடி தயாரிக்கும் இடத்தில் நடந்த வெடி விபத்தில் நான்கு பேர் உடல் கருகி இறப்பு … சம்பவம் நடந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து போலீஸ் தீவிர விசராணை.

*தமிழ்நாட்டில் பாலியல் வன் கொடுமை வழக்குகளில் ஏழு சதவிகித குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுவதாக சிதம்பரத்தில் நந்தனார் குரு பூஜை விழாவில் பேசிய ஆளுநர் ரவி புகார் .. சாதிய பாகுபாடுகள் தமிழகத்தில் அதிகரித்து வருவதகாவும் விமர்சனம்.

*புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியை கடந்த 2004-ஆம் ஆண்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை .. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் மேலும் 9 பேரை விடுவித்தும் நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு.

*பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி உளுந்தூர் பேட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு அவதூறாக பேசியதாக வழக்கு .. ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி தான் பேசியதற்கு குமரகுரு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நூதன நிபந்தனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

*சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பினால் பெய்த கன மழை காரணமாக டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு .. வெள்ளத்தில் சிக்கி மாயமான ராணுவ வீரர்கள் 23 பேரை தேடும் பணி 2- வது நாளாக தீவிரம்.

*உஜ்வாலா திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்டும் சமையல் சிலிண்டர்களின் விலையை மேலும் ரூ 100 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் .. இரண்டு வாரங்கள் முன்பு ரூ 200 குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை மேலும் குறைகிறது.

*டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கை கைது செய்தது அமலாக்கத் துறை ..டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுப்பதி்ல் ஊழல் செய்த வழக்கில் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நடத்தபட்டதை அடுத்து நடவடிக்கை.

*சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அரியானா மாநில ரியல் எஸ்டேட் அதிபர்கள் இரண்டு பேரை விடுவிக்குமாறு உச்சநீதின்றம் உத்தரவு.. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தை வைத்து ஒருவரை கைது செய்யக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தல் .

*லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த போது நிலத்தைப் பெற்றுக் கொண்டு ரயில்வேயில் வேலை கொடுதத்ததாக சி.பி.ஜ. தொடர்ந்த வழக்கு.. லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு.

*சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபிர் புரக்ஷத்தா உள்ளிட்ட இரண்டு பேரை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி.. இரண்டு பேரும் நேற்று நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டவர்கள்.

*வேதியியல் நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிந்தளிக்கப்படுவதாக அறிவிப்பு .. குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக மெளங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூ வரும்கும் நோபல் பரிசு.

*கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை.. கன மழையால் தேங்கிய தண்ணீர் வடியாததால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *