தலைப்புச் செய்திகள் (14-10-2023)

*உலககோப்பை தொடர்: அகமதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா…. 192 ரன்கள் இலக்கை 30.3 ஓவரில் எட்டி பாகிஸ்தானை பந்தாடியது….50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானை தொடர்ந்து 8வது முறையாக வீழ்த்தி இந்தியா சாதனை.

*சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்பு .. காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி முகமது மற்றும் சுப்ரியா சுலே உள்ளிட்டோரும் கலந்து கொண்டு உரை.

*பாஜக ஆட்சியில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு… 2024-க்கு பிறகு மோடி ஆட்சி இருக்காது என்பதை மக்கள் முடிவு செய்து விட்டதாகவும், ஒற்றுமையாக இருந்தால் பாஜகவை வீழ்த்தலாம் என்று உறுதி.

*வாழ்நாள் முழுதும் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் கருணாநிதி என்று திமுக மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உரை… பெண்ணுக்கு கல்வி கற்று கொடுத்தால், ஒரு குடும்பத்திற்கே கல்வி கற்று தரப்படுவதாக நெகிழ்ச்சி.

*இந்தியாவில் பெண்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்திப்பதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு… பல தலைமுறைகளை அடக்குமுறையிலிருந்து விடுபட போராடுகிறீர்கள் என்றும் பிரியங்கா காந்தி பேச்சு.

*இந்தியாவில் முதல்முறையாக காவல்துறையில் தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டதாக மகளிர் உரிமை மாநாட்டில் திமுக எம்பி கனிமொழி பெருமிதம்… பாஜக ஆட்சியில் எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை; அதற்கு மணிப்பூர் உதாரணம் என்றும் உரை.

*ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடினால் மட்டும் போதாது – பெண் குழந்தைகளின் உரிமைகளையும் மதிக்க வேண்டும்… எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, 14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியைச் சுட்டிக்காட்டி மாணவிக்கு அனுமதி மறுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி

*”சமூக வலைதளங்களில், அவதூறு மற்றும் தவறான கருத்துகளைப் பதிவிடும் கணக்குகளைக் கண்காணித்து தடுப்பதற்கு மாவட்ட எஸ்.பி.-க்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களின் அலுவலகங்களில் சிறப்புக் குழுக்கள் அமைப்பு”…. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்.

*நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக் கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு…நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது எனவும் அறிவுறுத்தல்.

*திமுக மகளிர் அணி மாநட்டில் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றதால் பலத்த பாதுகாப்பு … சோனியா, பிரியங்கா உள்ளிட்டோருக்கு கனிமொழி மதிய விருந்தளித்து கவுரவிப்பு.

*நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு கப்பல் பயணம் ஆரம்பம் … டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் போக்குவரத்தை தொடங்கிவைப்பு.

*நாகப்பட்டினத்தில் மத்திய, மாநில அமைச்சர்கள் முன்னிலையில் கப்பல் போக்குவரத்து தொடக்க விழா . . இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று வாழ்த்து.

*150 பேர் பயணம் செய்யக்கூடிய கப்பலில் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு ரூ 7670 கட்டணம் .. முதல் நாள் என்பதால் ரூ 3000 ஆக டிக்கெட் விலை நிர்ணயம்.

*கடந்த 2012 முதல் நாண்காண்டுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருந்த ராமேஸ்வரம் முருகனின் சொத்து மதிப்பு 354 மடங்கு அதிகரித்து இருப்பதாக புகார் .. நேரில் வந்து விளக்கம் தருமாறு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்.

*தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில வாடகை கார் ஓட்டுநர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் .. சொந்தக் கார்களை வாடகைக்கு விடுவதைத் தடுக்கக் கோரிக்கை.

*தமிழ்நாட்டுக்கு அதிக மழைத் தரக்கூடிய வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 23 ஆம் தேதி வாக்கில் தொடங்கலாம் .. சென்னை வானிலை மையம் கணிப்பு.

*நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அதிமுகவை தயார்படுத்தும் பணியில் எடப்பாடி பழனிசாமி தீவரம்.. பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை கவனிக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து நடவடிக்கை.

*முதலமைச்சராக இருந்த போது பைபர் ஆப்டிக்கல் கேபிள் பதிக்க டெண்டர் விட்டதில் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது புதிய வழக்குப் பதிவு … இன்னொரு வழக்கில் சிறையில் இருக்கும் சந்திரபாபு புதிய வழக்கிலும் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு மனு.

*மத்திய பிரதேச சட்ட மன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறது காங்கிரஸ் … மற்ற நான்கு மாநிலங்களுக்கான வேட்பாளர் தேர்வும் தீவிரம்.

*பெங்களூரில் காண்ட்ராக்டர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 42 கோடி ரூபாய் தெலுங்கானா மாநில தேர்தலுக்கு கொண்டு செல்ல வைத்திருந்த பணம் என்று புகார்… காங்கிரஸ் மீது பாஜக மற்றும் மதச்சாரபற்ற ஜனதா தளம் குற்றச்சாட்டு.

*காசாவில் வசிப்பவர்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான வழித் தடங்களை அமைக்கும் வரை தாக்குதல் நடத்த வேண்டாம் .. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வேண்டுகோள்.

*காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்க வேண்டும்,மக்களை கேடயங்களாக பயன்படுத்தக் கூடாது … பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பர்களை விடுவிக்குமாறும் ஐ.நா. பொதுச் செயலாளர் குட்ரோஸ் வலியுறுத்தல்.

*நடிகர் விஜயின் லியோ படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தினசரி ஐந்து காட்சிகள் மட்டும் திரையிட அனுமதி .. அதிகாலை காட்சிகளை வெளியடி அனுமதி இல்லை என்று அரசு விளக்கம்.

*இந்த ஆண்டு தீ பாவளிக்கு 3 படங்கள் வெளியாகிறது .. கார்த்திக்கின் ஜப்பான், விக்ரம் பிரபுவின் ரெய்டு , லாரன்சின் ஜிகிர்தண்டா ஆகிய படங்கள் மட்டும் மோதுகின்றன,

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *