* தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு .. தற்போது 42 சதவிகிதமாக இருக்கும் அகவிலைப் படி 46 சதவிகிதமாக அதிகரிப்பு.
* 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி … தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, மற்றும் 292 இயற்பியல் இடங்களுக்கு தேர்வு அறிவிப்பு.
* சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்பவர் கைது .. தான் சிறையில் இருக்கும் போது விடுதலை செய்வதற்கு ஆளுநர் அனுமதி தராததால் குண்டு வீசியதாக வாக்கு மூலம்.
*ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கு என்ன என்பதை பிரதிபலிப்பதாக அண்ணாமலை புகார் … தொடர் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுவதாக கருத்து.
*அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துக் கழக வேலைக்கு பணம் வாங்கிய வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். .. தமிழக அரசின் குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல் கேட்டு அமலாக்கத் துறை மனு.
* வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகள் அனைத்தையும் இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் பதிவு செய்யுமாறு போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவு .. பறிமுதல் செய்யப்பட்ட 120 பேருந்துகளையும் விடுவிக்க நடவடிக்கை.
* கோவில் நிதியை கோவில் தொடர்பான பணிகளுக்கே பயன்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தல் .. மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டக் கூடாது என்று கருத்து.
* சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ராயப்பேட்டை- மயிலாப்பூர், அடையாறு எல்.பி. சாலை மேம்பாலம் இரண்டையும் இடிக்க முடிவு … மெட்ரோ ரயில் அமைந்தபிறகு மேம்பாலங்கள் கட்டித்தரப்படும் என்று அறிவிப்பு .
* சோழப் பேரரசர் ராஜ ராஜனின் 1038 ஆம் ஆண்டு சதய விழா .. தஞ்சாவூரில் சிலைக்கு மாலை அணிவித்துக் கொண்டாட்டம்.
* பாஸ்போர்ட் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு .. டிஏபி உரம் ஒரு மூட்டை ரூ 1350 க்கே கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்.
* ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 218 பேர் பிணைக்கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு .. மனிதாபிமான அடிப்படையில் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு போப்பாண்டர் வேண்டுகோள்.
* காசா முனையில் வசிப்பவர்கள் உணவு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பதாக தொடாந்து புகார் .. எகிப்து நாட்டின் ராபா எல்லையில் குவிந்து கிடக்கும் நிவாரணப் பொருட்களை காசாவுக்குள் அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்.
* ஈரான் நாட்டில் நடிகைகள் 12 பேர் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிப்பு .. ஆடைக் கட்டுப்பாடு மற்றும் ஹி ஜாப் விதிகளை மீறியதாக கூறி கலாச்சார அமைச்சகம் நடவடிக்கை.
*ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிவேக சதத்தை பதிவு செய்தார் ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல்… நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதம் அடித்து மேக்ஸ்வெல் சாதனை படைத்தார்.